இந்தப் படம் வெற்றி அடைய இதை எல்லாம் செய்தார்கள் - நெகிழ்ச்சியில் நடிகர் ஜீவா பகிர்ந்த தகவல்
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஜீவா. சமீபத்தில் ஜீவா நடிப்பில் வெளியாகி இருந்த படம் தலைவர் தம்பி தலைமையில். இந்த படத்தை ஃபேமிலி படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் தான் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை கண்ணன் ரவி என்பவர் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிரத்தனா, ஜென்ஷன் திவாகர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார். பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்திற்கு பெரிய அளவில் விளம்பரம் இல்லை என்றாலும் ரசிகர்கள் நல்ல விமர்சனத்தை தான் கொடுத்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய வெற்றி விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் பட குழுவினர் கலந்து கொண்டு தங்களுடைய சந்தோஷத்தை பகிர்ந்து இருக்கிறார்கள்.
தலைவர் தம்பி தலைமையில்:
அந்த வகையில் மேடையில் பேசிய ஜீவா, நாங்கள் கடந்த 4,5 மாதங்களாக குமுளியில் ஒரு குடும்பமாக தங்கி இருந்து தான் இந்த படத்தை எடுத்தோம். அங்கிருந்த மக்கள் எங்களுக்காக கிடாவெட்டி சாமி கும்பிட்டு இந்த படம் விஸ்வரூப வெற்றி அடையனும் என்று வாழ்த்தி இருந்தார்கள். படப்பிடிப்பு முடிந்தவுடன் நாங்கள் கிளம்பி விட்டோம். அவர்கள் கண் கலங்கி வழி அனுப்பியது இன்னும் என் கண்ணிலே இருக்கிறது. இந்த வெற்றிக்கு அந்த மக்களுடைய அன்பும் ஒரு முக்கிய காரணம்.
https://www.youtube.com/watch?v=QKlrXOFofgU
ஜீவா பேட்டி:
இந்த படத்தினுடைய உண்மையான ஹீரோ இயக்குனர் தான். ஒவ்வொரு நடிகர்களிடம் இருந்து திறமையை வெளிக்கொண்டு வந்து காட்சிகளை சிறப்பாக மெருகேற்றினார். ஒரு நடிகராக எனக்கு தமிழில் ஒரு பெரிய வெற்றியை இந்த படத்தின் மூலம் இயக்குனர் கொடுத்து சாத்தியமாகி இருக்கிறார். என்னுடைய அப்பா ஆர் பி சவுத்ரி 99 படங்களை தயாரித்திருக்கிறார். ஆனால், இதுவரை அவருக்கு பாராட்டு விழா கூட நடத்தியதில்லை. தயாரிப்பாளர் கண்ணன் ரவி தான் தங்கள் தமிழ் சங்கம் மூலமாக என்னுடைய தந்தைக்கு ஒரு பெரிய பாராட்டு விழாவை நடத்தினார். அது என் வாழ்வின் மிகப்பெரிய சாதனையாக பார்க்கிறேன்.
படம் பற்றி சொன்னது:
தந்தையின் ஆசிர்வாதம் இந்த வெற்றிக்கு காரணம். வி டிவி கணேஷ் தான் இந்த கதையை முதலில் சிபாரிசு செய்தார். தயாரிப்பாளரைச் சந்திக்கச் சென்றோம். கதை பிடித்திருந்ததால் 'படம் எப்போது வேண்டுமானாலும் பண்ணுங்கள் என்று சொன்னவுடனே அட்வான்ஸ் கொடுத்து விட்டார். அந்த நம்பிக்கை தான் இன்று வெற்றியாக மாறியது. இந்த தருணங்கள் இப்போ இனிமையாக நினைவுகளாக மாறி இருக்கிறது என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.