அட, ஜீவா மகனா இது அச்சு அசலாக அவரை மாதிரியே இருக்கார் பாருங்க - புகைப்படம் இதோ.

By Rajkumar · 21/9/2020

தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் அறிமுகமாகி இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் ஜீவாவும் ஒருவர். தமிழில் 2003 ஆம் ஆண்டு இயக்குனர் ரவி மரியா இயக்கத்தில் வெளியான 'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் பிரபல தயாரிப்பாளர் ஆர். பி சௌத்ரியின் மகன் என்பது நமக்கு தெரியும்.

நடிகர் ஜீவா நடித்த முதல் படம் அந்த அளவிற்கு ஒன்றும் வெற்றி பெறவில்லை. ஆனால், இவர் அமீர் இயக்கத்தில் நடித்த 'ராம்' படம் இவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது என்றும் கூறலாம். அதற்கு பின்னர்'டிஷும்,ஈ, கற்றது தமிழ்' போன்ற படங்களில் வித்யாசமான கத்தபத்திரங்களில் நடித்து, தான் ஒரு சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

தொடர்ந்து நடித்து வந்த ஜீவா பின்னர் வித்யாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதை கைவிடுத்து பின்னர் கமெர்சியால் படங்களில் இறங்கி விட்டார். அதனால்,இவரது மவுசு கொஞ்சம் இறங்கியது. 2007 ஆம் ஆண்டு சுப்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு 2010 ஆண்டு ஸ்பர்ஷா சௌதிரி என்ற மகனும் பிறந்தார். இவரை பொதுவாக எவரும் கண்டிருக்கு வாய்ப்பில்லை. சமீபத்தில் நடிகர் ஜீவா தனது மனைவியின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும், அவரது மகனின் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் அவரது மகன் பார்ப்பதற்கு அச்சு அசலாக ஜீவா போலவே இருக்கிறார் பாருங்க.

behindtalkies AMP · Quick view
View full