சமுதாயத்தின் பெயர்களை குறிப்பிட்டு பேசிய நடிகர் ஜான் விஜய்- சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வைரல் வீடியோ

By Rajkumar · 17/8/2024

நடிகர் ஜான் விஜய் குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வெளிப்படையாக பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசும் பொருளாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜான் விஜய். இவர் பெரும்பாலும் படங்கலில் துணை கதாபாத்திரங்களிலும், வில்லன் வேடங்களில் தான் நடித்திருக்கிறார். இவர் ஓரம் போ, அங்காடி தெரு, கோ, எனிமி, மௌனகுரு, சார்பட்டா பரம்பரை போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் அருள்நிதி நடித்துள்ள 'டிமான்டி காலனி 2' திரைப்படத்திலும் ஜான் விஜய் நடித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், டிமான்டி காலனி 2 படத்தின் ஸ்பெஷல் ஷோவில், படக்குழுவினர்களோடு ஜான் விஜயையும் கலந்து கொண்டார். அப்போது பட குழுவினர் அனைவரும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள்.

டிமான்டி காலனி 2 ஸ்பெஷல் ஷோ:

அப்போது நடிகர் ஜான் விஜய், படக்குழுவினருடன் பேசும் போது குறிப்பிட்ட சமூகத்தின் பெயர்களை சொல்லி மிகவும் சகஜமாக சிரித்து பேசியுள்ளார். அந்த வீடியோவில், நடிகர் ஜான் விஜய் தனது மனைவி மாதவி இளங்கோவன் மற்றும் நடிகர் அருண் பாண்டியன் உள்ளிட்ட சில நண்பர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொள்ளும் போது, 'நீங்க எல்லாம் தேவர் சமுதாயம் ஒரு பக்கமா நில்லுங்க. நாங்க எல்லாம் நாடார் சமுதாயம் அதனால் ஒன்றாக நிற்கிறோம்' என்றவாறு சிரித்து பேசியுள்ளார்.

ஜான் விஜய் செய்த வேலை:

தற்போது, ஜான் விஜயின் இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிலர் இந்த வீடியோவை பார்த்த பின், ஜான் விஜய் சாதிவெறி மிகுந்தவர். அவரை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். ஜான் விஜய் இது போல் சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் தடவை இல்லை. சமீபத்தில் கூட பாடகி சின்மயி, ஜான்விஜய் குறித்து சில விஷயங்களை பதிவிட்டு இருந்தார்.

சின்மயி பதிவு :

அதில் அவர், நடிகர் ஜான் விஜய் சென்னையில் உள்ள பிரபலமான கிளப்புகள் மற்றும் பப்புகளுக்கு வழக்கமாக செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அங்கு அவர் பெண்களிடம் தவறான நோக்கில் தான் அனுப்புவார். அந்தப் பெண்கள் அவரிடம் முடியாது என்று சொன்னாலும் அதை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். காரணம், அவர் செலிப்ரட்டி என்பதால் அவரிடம் எஸ் சொல்ல வேண்டும் என்று தொடர்ந்து பாலோ பண்ணி தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பார்.

பெண்களுக்கு தொல்லை கொடுப்பார் :

அவரிடம் பேச விருப்பமில்லை என்று சொன்னாலும் பல பெண்களுக்கு அவர் தொல்லை கொடுத்திருக்கிறார். இவரால் பல பெண்கள் மன அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். இதை பெண் ஒருவர் இணையத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த தகவலை சோசியல் மீடியாவில் சின்மயி டேக் செய்து இருந்தார். ‌ இந்த விவகாரமும் கோலிவுட் வட்டாரத்தில் காட்டு தீயாய் பரவியது. குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் குறிப்பிட்ட ஜாதி பெயரை பொது இடங்களில் சகஜமாக பேசியதின் மூலம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full