பிரம்மாண்டமாக வெளியான ஜுனியர் என்டிஆரின் 'தேவரா' படம் எப்படி இருக்கு-முழு விமர்சனம் இதோ
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தேவரா’. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை கொரட்டாலா சிவா இயக்கி இருக்கிறார். இந்த படத்தினை என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இதுதான் இவர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகும் முதல் படம். மேலும், இவர்களுடன் இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த், நரேன் உட்பட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தின் தொடக்கத்திலேயே இந்தியாவின் உலகக்கோப்பை நடக்கிறது. அதனுடைய முன்னெச்சரிக்கையாக பெரிய கேங்ஸ்டார்களை அடக்க போலீஸ் குரூப் தயாராகிறது. இன்னொரு பக்கம் எத்தி என்ற கேங்ஸ்டரை தேடி செங்கடல் செல்கிறார். அப்போது பிரகாஷ்ராஜ், தேவரா கதையை போலீஸ் குரூப் இடம் சொல்ல ஆரம்பிக்கிறார். தேவரா என்பவர் ஊர் மக்களுக்கு தலைவன்.
கடல் வழியாக முறைகேடாக வரும் ஆயுதங்களை அரசியல்வாதி ஒருவருக்கு எடுத்து தருகிறார். அவருடைய கேங்கில் சையிப் அலிக்கான், கலையரசன் போன்றவர்கள் இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தான் செய்யும் வேலை மோசமானது, தவறானது என்றும் இதனால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை தேவரா உணர்ந்து கொள்கிறார். அதற்கு பின் அவர் வேலையை நிறுத்த சொல்கிறார். ஆனால், பணத்தாசையால் தேவராவுடன் இருப்பவர்கள் அவரை கொல்ல முயற்சிக்கிறார்கள்.
பின் தேவரா தன்னை கொல்ல வந்தவர்களை துவம்சம் செய்து கொன்றுவிட்டு மாயமாகிறார். அதற்குப்பின் தேவரா எங்கே போனார்? என்ன ஆனார்? கடலில் நடக்கும் தவறான வேலைகள் தொடர்ந்ததா? தான் என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் ஜூனியர் என்டிஆர் அப்பா- மகன் ரோலில் மாஸ் காட்டிருக்கிறார்., அப்பாவாக வரும் தேவாரா தான் செய்யும் வேலை தவறு என்று உணர்ந்து மற்றவர்களை தட்டிக் கேட்கும் வேலையில் மிரட்டி இருக்கிறார்.
வீரத்தில் சிறந்தவனாக அப்பா தேவரா இருக்கிறார். ஆனால், அவருடைய மகன் கோழையாக இருக்கிறார். கடல் சம்பந்தப்பட்ட கதை என்பதால் ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் அற்புதமாக இருக்கிறது. ஆனால், சில காட்சிகள் தான் ஏற்றுக்கொள்ள அளவில் இல்லை. குறிப்பாக, சுறா மீனிலேயே கயிற்றைக் கட்டி குதிரை சவாரி செய்யும் ஜூனியர் என்டிஆர் செய்திருக்கிறார். இது செயற்கை தனமாக இருக்கிறது. ஜான்வி கபூருக்கு இதுதான் முதல் படம்.
இருந்தாலுமே, அவருடைய கதாபாத்திரத்திற்கு அழுத்தம் இல்லை. ஏதோ கதைக்கு வேண்டும் என்று வைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு, பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. பாகுபலி,RRR படத்தை மறக்க வைக்கும் அளவிற்கு இந்த படத்தை இயக்குனர் காட்ட முயற்சித்து இருக்கிறார். ஆனால், சில காட்சிகள் பாகுபலி படத்தினுடைய காட்சிகளை நினைவூட்டி இருக்கிறது. மொத்தத்தில் ஆக்சன் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும்.
நிறை:
முதல் பாதி அருமை
ஆக்சன் காட்சிகள் அற்புதம்
என்டிஆர் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது
அனிருத் இசையில் பட்டையை கிளப்பி இருக்கிறார்
கதைக்களம் அருமை
குறை:
லாஜிக் குறைபாடுகள் நிறைய இருக்கிறது
பாகுபலி படத்தை சில காட்சிகள் நினைவு படுத்துகிறது.
கதாநாயகியின் கதாபாத்திரத்தை அழுத்தமாக கொடுத்திருக்கலாம்
மொத்தத்தில் தேவரா- ஆக்ஷன்