ஊருக்கே உதவி, தினம் 13 பாட்டில் பீர், ஒரே நாளில் அனைத்தையும் இழந்த நடிகர் கலாபவன் மணி - முழு விவரம் இதோ

By subhashini · 28/7/2025

கலாபவன் மணி இறப்பின் காரணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகர் கலாபவன் மணி. இவர் பாடகரும் ஆவார். இவர் கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் குன்னிசேரி வீட்டில் ராமன் மணி. இவருக்கு சின்ன வயதிலிருந்தே கலையின் மீது அதிகாரம் கொண்டவர். இவர் சிறு வயதிலிருந்தே பாடல் பாடுவது, மிமிக்ரி பண்ணுவது என்று கவனம் செலுத்தி வந்தார்.

இதனால் இவரை கலாபவன் குழுவில் சேர்த்துக் கொண்டார்கள். அதன் மூலம் தான் அவருக்கு கலாபவன் மணி என்ற பெயரும் வந்தது. கலாபவன் என்பது ஒரு மேடை நிகழ்ச்சி நடத்தும் குழு. 90 காலகட்டத்தில் பிரபலமாக இருந்த குழுவில் இந்த குழுவும் ஒன்று. தற்போது இருக்கும் மலையாள முன்னணி நடிகர்கள் இந்த குழுவில் இருந்து வந்தவர்கள் தான். இந்த குழுவில் இருக்கும் போது தான் மணி அவர்கள் சொந்த இசையில் சொந்த வரிகளை கொண்டு பாடல் எழுதி மேடையில் பாடுவார்.

கலாபவன் மணி:

அதன் பிறகு தான் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. இவர் முதன் முதலாக தமிழில் கேப்டன் பிரபாகரன் படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் இவர் மலையாள மொழியில் குணசித்திர வேடத்தில் நடித்தார். பின் இவர் காமெடி, வில்லன், குணச்சித்திரம், ஹீரோ என்று பல கெட்டப்பில் பின்னி பெடல் எடுத்து இருந்தார். இதனாலே இவர் சீக்கிரமாக சினிமா துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இது தொடர்ச்சியாக இவருக்கான பட வாய்ப்புகளுமே வந்து கொண்டிருந்தது.

கலாபவன் மணி குறித்த தகவல்:

அதன் பின் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் மட்டும் இவர் 30க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். இவர் இதுவரை மொத்தம் 250 படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். இவர் சினிமாவில் மட்டுமில்லாமல் சமூக சேவையும் செய்யக் கூடியவர். பல பேருக்கு இவர் உதவும் குணம் கொண்டவர். இவருடைய சொந்த ஊரில் இன்றும் பேசப்பட்டு தான் வருகிறது. மணியிடம் உதவி கேட்டு தினமும் 20 பேராவது வருவார்களாம். அந்த அளவுக்கு தன்னால் முடிந்த உதவிகளை மணி தன்னை தேடி வருபவர்களுக்கு செய்பவர். இப்படிப்பட்ட குணம் கொண்டவர் ஒரே நாளில் அநியாயமாக இறந்தது தான் பலருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது.

https://www.youtube.com/watch?v=Ur9ZxylM5w0

கலாபவன் மணி இறப்பு:

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் தேதி தன்னுடைய பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கிடந்திருந்தார். பின் உடனடியாக இவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையும் அளித்து வந்தார்கள். இருந்தாலுமே சிகிச்சை பலனின்றி கலாபவன் மணி இறந்தார். இது ஒரு பக்கம் இருக்க, இவருடைய மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக எல்லாம் கூறப்பட்டது. விஷம் வைத்து இவரை கொன்று விட்டார்கள் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால், இவருக்கு இருந்த குடிப்பழக்கத்தால் இவர் இறந்தது என்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், ஏழு ஆண்டுகள் கழித்து இவருடைய வழக்கை விசாரித்த அதிகாரி பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், இவர் உடலில் மெத்தில், எத்தில் ஆல்கஹால் இருந்ததாகவும், க்ளோரோபைரபோஸ் என்ற கிருமிநாசினி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இறப்புக்கு காரணம்:

இறந்த அன்று ஒரு நாளைக்கு 12 முதல் 13 பாட்டில் பீர் குடித்ததால் தான் கலாபவன் மணிக்கு மரணம் ஏற்பட்டது. அதில் மெத்தில் ஆல்கஹாலும் இருந்தது. ஏற்கனவே இவருக்கு நீரிழிவு நோயாளி இருந்தது. இதற்காக இவர் இரண்டு வேளையும் மாத்திரை எடுத்துக் கொண்டு வந்திருந்தார். இந்த மாத்திரைகள் சாப்பிடும்போது கலாபவன் மணி பீர் குடித்ததால் உடலில் வேதி வினைகள் ஏற்பட்டு கடுமையாக பாதித்திருக்கிறது. நீரிழிவு நோய், கல்லீரல் பாதிப்பு குறித்து யாரிடமும் கூறாமல் மறைத்திருக்கிறார். கல்லீரல் பாதிக்கப்பட்டும் இவர் அதிகமாக பீர் குடிக்கும் பழக்கத்தை விடவில்லை. ஒரு கட்டத்தில் கல்லீரல் சுத்தமாக செயலிழந்து ரத்த வாந்தி எடுத்தும் அவர் பீர் குடிப்பதை நிறுத்தவில்லை. இதனால்தான் இவர் இறந்தார் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full