காளிதாஸ் காதலித்து கரம் பிடித்த தாரணி இந்த ஜமீன் வாரிசா? - ஆனால் சிம்பிளாக நடந்த திருமணம்

By subhashini · 8/12/2024

காளிதாஸ் ஜெயராம்-தாரணி திருமணம் புகைப்படம், வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து மிக பிரபலமானவர் நடிகர் ஜெயராம். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்த ஜெயராம் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

மேலும், ஜெயராமுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். அதில் தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக காளிதாஸ் ஜெயராம். இவர் தமிழ் மட்டுமின்றி ஏராளமான மலையாள படங்களில் நடித்து வருகிறார். அதில் இவர் சில தமிழ் படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். மீன் குழம்பும் மண்பானையும், ஒரு பக்க காதல், விக்ரம், பாவ கதைகள். போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

காளிதாஸ் ஜெயராம் குறித்த தகவல்:

குறிப்பாக இவர் நடித்த பாவக்கதைகள் படத்தில் திருநங்கையாக நடித்த காளிதாஸ் பலரின் பாராட்டுகளை பெற்றார். அதன் பின் கடந்த ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் பல ஆண்டு கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்திருந்தார். அதே போன்று அந்த படத்தில் சிற்றரசர் ரோலில் காளிதாஸ் நடித்து இருந்தார்.

காளிதாஸ்-தாரணி காதல்:

இவர் கடைசியாக தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். மேலும், இவர் மலையாள சினிமாவிலும் கலக்கி கொண்டிருக்கிறார். இதற்கிடையில் இவர் மாடல் அழகியான தாரணி காளிங்கராயர் என்பவரை சில வருடங்களாகவே காதலித்து வந்திருந்தார். இது தொடர்பாக கூட இவர் சோசியல் மீடியாவில் உறுதி செய்திருந்தார்.

காளிதாஸ்-தாரணி நிச்சயதார்த்தம்:

தாரணி அவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் இந்தியா போட்டியில் மூன்றாம் இடம் பிடித்திருந்தார். பின் தங்களின் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்குமே நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் மிக விமர்சையாக திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த திருமணத்தில் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

https://youtube.com/shorts/RModpkNRj_w?si=oUgbymV6t6aHYFQ7

தாரணி குறித்த தகவல்:

அதன் பின் இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்து இருந்தது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திருந்தார்கள். மேலும், தாரணி அவர்கள் வேறு யாரும் இல்லை ஒரு ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர். தமிழ்நாட்டை சேர்ந்த ஊத்துக்குளி ஜமீன் வாரிசு தான் தாரணி. இவரைத்தான் காளிதாஸ் ஜெயராம் காதலித்து வந்து திருமணம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full