கல்கி படத்தில் கமல் வில்லனா? படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? கமல் விளக்கம்
கல்கி திரைப்படத்தில் கமலஹாசன் நடித்திருக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அதிலும், 2015 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் இந்திய அளவில் பிரபலமானது. அதன் பின் பிரபாஸ் நடித்த படங்கள் பெரிதாக வரவேற்கப்படவில்லை.
அந்த வகையில் கடந்த ஆண்டு பான் இந்தியா படமாக பிரபாஸ் நடிப்பில் வெளியாகி இருந்த ஆதிபுருஷ் ராமாயணம் பற்றிய கதை. ராமாயணம் கதையை மையக்கமாக வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டாலும், இதுவரையில் எந்த படமும் தற்போது உள்ள நவீன தொழில் நுட்பத்தை வைத்து எடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி இருந்தது. அதோடு பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பதினால் எதிர்பார்ப்பு இன்னமும் அதிகமாகி இருந்தது.
பிரபாஸ் திரைப்பயணம்:
மேலும், இந்த ஆதிபுருஷ் திரைப்படமானது இராமாயணத்தில் வரும் யுத்த காண்டம் பற்றிய கதை. ஆனால், படம் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. எதிர்மறை விமர்சனத்தை தான் சந்தித்து இருந்தது. தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கல்கி 2928. இந்தப் படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருக்கிறார், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், ரானா டகுபதி, தீபிகா படூகோன் , கமல்ஹாசன் , ஷோபனா , அனா பென் , திஷா பதானி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
கல்கி படம்:
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். மேலும், இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் ஜூன் 27-ஆம் தேதி திரையரங்கிற்கு வர இருப்பதால் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் படம் ரிலீஸ் ஆகும் நிலையில் இருப்பதால் படக்குழுவினர் புரோமோஷன் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முன்வெளியீட்டு விழா:
அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தினுடைய முன் வெளியீட்டு விழா நடைபெற்று இருந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசி இருந்தார்கள். அப்போது நடிகர் கமலஹாசன், எனக்கு வில்லன் கதாபாத்திரங்கள் ரொம்ப பிடிக்கும். எப்போதுமே வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதில் அதிக ஆர்வம். ஒரு ஹீரோ, காதல் பாடல் எல்லாம் பாடிக்கொண்டு ஹீரோயினாக்காக காத்திருக்கும் போது வில்லன் தான் படத்திற்கு உதவி செய்வான்.
கல்கி படம் குறித்து சொன்னது:
வில்லன் தனக்கு பிடித்தது எல்லாமே செய்வான். கல்கியில் நான் அதைத்தான் செய்திருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது. கண்டிப்பாக இயக்குனர் நாக் அஸ்வினை பாராட்டியே தீர வேண்டும். சாதாரண மனிதர்கள் தான் அசாதாரணமான செயல்களை செய்வார்கள். இயக்குனர் கே பாலச்சந்திரனை எடுத்துக்கொண்டால், அவர் பார்க்க அரசு அதிகாரி மாதிரி இருப்பார். ஆனால், அவர் அற்புதமான படங்களை இயக்கியிருக்கிறார் என்று பெருமையாக பேசி இருக்கிறார்..