மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கமல் ஹாசனின் எச்சரிக்கை அறிக்கை- நடந்தது என்ன?
கமல்ஹாசன் வெளியிட்டு இருக்கும் எச்சரிக்கை அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் கமலின் நடிப்பில் வெளிவந்த படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி இருந்தார்.
ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த “இந்தியன்” படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்து இருந்தார்கள் படக்குழு. 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் “இந்தியன் மீண்டும் படம் வந்தது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.
கமல்ஹாசன் குறித்த தகவல்:
இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதை அடுத்து தற்போது கமலஹாசன் அவர்கள் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைப் என்ற படத்தில் பிசியாக நடித்திருக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இதை அடுத்து இவர் இன்னும் சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார். இது மட்டும் இல்லாமல் கமலஹாசன் அவர்கள் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ்:
இதன் மூலம் இவர் நிறைய படங்களை தயாரித்திருக்கிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படம் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த படம் 70 முதல் 90 கோடி பட்ஜெட்டில் தான் உருவாக்கப்பட்டது. ஆனால், 350 கோடி வரை வசூல் செய்து சாதனை செய்தது.
மோசடி கும்பல் செய்த வேலை:
இதை தொடர்ந்து தற்போது இவர் தான் நடித்து வரும் தக் லைப் படத்தையும் தயாரித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் கமல்ஹாசன் விடுத்திருக்கும் எச்சரிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் பட வாய்ப்புகள் வாங்கி தருவதாக சொல்லி சில கும்பல் சோசியல் மீடியாவில் அறிவித்து மோசடி செய்திருக்கிறார்கள். இது தொடர்பாகத்தான் கமலஹாசன் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
— Raaj Kamal Films International (@RKFI) March 29, 2025
கமலஹாசன் அறிக்கை:
அதில் அவர், ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிக் ஏஜென்டுகளை நாங்கள் நியமிக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக வரும் செய்திகள் எல்லாம் எந்த வகையிலும்
உண்மை கிடையாது. அதை நம்ப வேண்டாம். எங்களுடைய ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.