அப்போ பள்ளி கட்டணம் கூட செலுத்த முடியல, கண்கலங்கியபடி கார்த்தி சொன்ன விஷயம் - முழு விவரம் இதோ
பள்ளியின் நூற்றாண்டு விழாவில் நடிகர் கார்த்தி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நூற்றாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.இந்த விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவரும், நடிகரும், முன்னாள் மாணவர் சங்கத் தலைவருமான நடிகர் சிவக்குமார், அவரது இரண்டாவது மகன் நடிகர் கார்த்தி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், இந்த விழாவில் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டது. அதோடு இந்தபள்ளியில் படித்து முடித்து பல்வேறு துறைகளில் சாதித்த முன்னாள் மாணவர்களுக்கு சிறப்பிக்கப்பட்டது. பின் இந்த நிகழ்வில் பேசிய நடிகர் கார்த்தி, அரசுப் பள்ளிகளின் தரம் வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளுக்கு இணையாக இருக்கிறது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் உயர்தரக் கல்வி கொடுக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே சிறந்து விளங்குகிறார்கள்.
பள்ளி ஆண்டு விழா:
என்னுடைய அப்பா கல்வி ஒழுக்கம் மூலம் வாழ்க்கையில் சாதித்து காட்டியவர். அரசு பள்ளிகளில் 65 லட்சம் பேர் படிக்கின்றனர். தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை கிராமப்புற மாணவர்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பது அரசு பள்ளிகள் தான். அப்போது எல்லாம் என் தந்தையின் சகோதரி அதாவது என் அத்தையின் இளமை காலத்தில் பள்ளிக்குச் செல்லவும், கல்விக் கட்டணம் செலுத்தவும் முடியவில்லை. இதனால் அவர் ரொம்பவே சிரமப்பட்டார் என்று மேடையில் கார்த்தி கண் கலங்கினார்.
https://www.youtube.com/watch?v=HrhbkGRKlms
விழாவில் கார்த்தி சொன்னது:
கார்த்தி கண்ணீர் விட்டதைக் கண்ட சிவக்குமார், அவரை ஆறுதல் செய்து அமர வைத்தார். இதை பார்த்த அங்கிருந்த அனைவரையும் கலங்க வைத்தது. பின் பள்ளிக்கு 5 லட்சம் ரூபாய் நன்கொடை அளிப்பதாக கார்த்தி அறிவித்தார். அதன் பின்னர் பேசிய நடிகர் சிவக்குமார், சிறுவயதில் ஆசிரியர்களைப் பார்த்து அவர்கள் போல ஆக வேண்டும் என்பதற்காக பாடங்களை மனப்பாடம் செய்து படித்தேன். என் உருவம் தத்ரூபமாக இருந்ததால் ஓவிய ஆசிரியராக வேண்டும் என்று ஓவியம் பயிற்சி பெற்றேன்.
https://www.youtube.com/shorts/oXZG8qKUEyA?si=y6NBuEWDB6Nu4OYs
சிவகுமார் பேசியது:
கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனங்களைக் கேட்டு திரையுலகில் செல்ல வேண்டும் என்று நினைத்து, அவர் வசனத்தையே பேசி நடித்தேன். பின் கலைஞர் வசனம் ஒன்றைக் கூறி, இது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குத் தெரிகிறதா? என்று கேட்டு சிவகுமார் மேடையில் நடித்துக் காட்டினார். இதை பார்த்து பலரும் நெகிழ்ந்து போய் கைதட்டினார்கள். பின் விழாவில் இறுதியாகப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மற்ற மாணவர்களுடன் ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஒப்பீடுவது மாணவர்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி:
மாணவர்களின் திறமையை கண்டறிவதில் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அதிக பொறுப்பு இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பள்ளி மாணவர்களுடைய திறமையை கண்டறிந்து அவர்களுக்கு ஊக்கத்தை கொடுக்க வேண்டும். காந்தி சொல்வது போல் பள்ளி என்பது மிகப் பெரிய தொழிற்சாலை. நாம் எதை உருவாக்கினோம் என்றால் பள்ளி உயர்ந்த நல்ல பண்புள்ள மனிதர்களை உருவாக்கினோம். மாணவர்கள் வாங்க மதிப்பெண்கள் மட்டும் மதிப்பிட செய்யாது. ஒவ்வொருவரும் தனி திறமை வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அதிக நிதி பெறும் துறையாக பள்ளிக்கல்வித் துறை உள்ளது. பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டாலும், அதற்கேற்ப நேர்மையும் ஒழுக்கமும் அவசியம் என்று கூறி இருக்கிறார்.