சர்தார் 2 மிகப்பெரிய விஷயத்தை பற்றி பேசுது - நிகழ்ச்சியில் கார்த்தி சொன்ன விஷயம்
தமிழ் சினிமா உலகில் பிரபமான நடிகர்களில் ஒருவராக கார்த்தி திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் ‘பருத்தி வீரன்’ என்ற படம் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு நடிகராக அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. அதை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. இதை அடுத்து கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த மெய்யழகன் படமும் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து தற்போது இவர் நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கைதி 2, வா வாத்தியார், கார்த்திக் 29 போன்ற பல படங்களில் கார்த்தி கமிட்டாகி இருக்கிறார்.
கார்த்தி குறித்த தகவல்:
அந்த வகையில் தற்போது கார்த்தியின் நடிப்பில் உருவாகி வரும் படம் சர்தார் 2. ஏற்கனவே சர்தார் முதல் பாகத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் தான் இரண்டாம் பாகத்தையும் இயக்கி இருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சர்தார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதோடு கார்த்தியின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமாக சர்தார் அமைந்தது.
சர்தார் 2 படம்:
தற்போது இந்த இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த ராசி கண்ணா, சங்கி பாண்டே, லைலா, ரித்விக், முனீஷ்காந்த், அவினாஷ், யூகி சேது ஆகியோருடன் எஸ் ஜே சூர்யா, மாளவிகா மோகனன் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் முதல் பாகத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். தற்போது இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் திரைப்பட குழு சார்பில் சென்னையில் இந்த படம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி:
இதில் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, சர்தார் என்ற பெயர் வைத்ததில் இருந்தே படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மித்ரன் என்று சொன்னாலே பயமுறுத்த போறாரு என்று தான் சொல்கிறார்கள். முதல் இரும்புத்திரை படத்தில் மொபைல் மெசேஜ் வந்தாலே பயமாக இருக்கும். அடுத்த சர்தார் படத்தில் வாட்டர் பாட்டில் பார்த்தாலே பயமாக இருக்கும். இந்த படத்தில் அதைவிட பயங்கரமான விஷயத்தை வைத்திருக்கிறார். உண்மையாகவே இந்த படத்தில் அச்சுறுத்தக்கூடிய ஒரு பெரிய விஷயத்தை தொட்டிருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=iyryHxiMvyc
படம் பற்றி சொன்னது:
படம் பார்த்தால் கண்டிப்பாக எல்லோருக்குமே பிடிக்கும். அதேபோல் வில்லன் பெரியாளாக இருந்தா தான் ஹீரோவோட மதிப்பும் பெரிதாக இருக்கும். சண்டை போட ரெண்டு பேருமே மிகப்பெரிய ஆளாக இருந்தால் தான் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். அந்த மாதிரி தான் இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்கிறார் என்றவுடன் நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். மித்ரன் எப்போதுமே பிளாஷ்பேக் காட்சி தான் எடுப்பார். அந்த செட்டை பார்த்தவுடன் ரொம்பவே பயந்துவிட்டேன். அந்த அளவுக்கு இந்த படத்தில் மித்ரன் ஓட உழைப்பு நிறைய இருக்கிறது. நிறைய சுவாரஸ்யமான விஷயத்தையும் மெனக்கட்டு செய்திருக்கிறார். எஸ்.ஜே. சூர்யா உடைய நடிப்பிற்கு தீனி எவ்வளவு கொடுத்தாலுமே பத்தாது. அவர் கேட்டு பண்றத பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். நாங்கள் செட்டில் இருக்கும் போது எஸ்.ஜே சூர்யா வந்துவிட்டால் போனை தொட மாட்டோம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டே இருப்போம் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.