நான் இந்த படத்தில் நடிக்க காரணம் அந்த டாக்குமெண்டரி தான் - நடிகர் கார்த்தி ஓபன் டாக்
தமிழ் சினிமா உலகில் பிரபமான நடிகர்களில் ஒருவராக கார்த்தி திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வா வாத்தியார். இது கார்த்தி உடைய 26வது படம். இந்த படத்தை இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு கீர்த்தி செட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்தராஜ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த படம் வருகிற 12-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் கார்த்தி, இந்த படத்தோட கதையை கேட்டேன். முதலில் எனக்கு புரியவில்லை என்று சொல்லிவிட்டேன். நலன் குமாரசாமி ஷாக் ஆகிவிட்டார். திரும்ப வந்து கதையை சொன்னார்.
கார்த்தி பேட்டி:
அதே கதை எனக்கு எமோஷனலாக கனெக்ட் ஆனது. என்ன பண்ணிங்கன்னு கேட்டேன். ஒரு நாலு சீன் உள்ளே வைத்தேன். அவ்வளவுதான் என்று நலன் சொன்னார். கதை எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. கொரோனா காலகட்டத்தில் வாய்ஸ் ரெக்கார்டிங் செய்து கதையை எனக்கு அனுப்பி இருந்தார். எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. நலனுடன் ஒரு படம் பண்ணியே ஆகணும் என்று நினைத்தேன். கதை அவர் ரொம்ப ஈசியாக சொல்லிவிட்டார். நான் எத்தனை நாள் தூங்காமல் தூக்கம் இல்லாமல் இருந்தேன் என்று எனக்கு தான் தெரியும்.
https://www.youtube.com/watch?v=AyyBm4RQlpo
படம் பற்றி சொன்னது:
இந்த கதையை கேட்டு எல்லோரும் ஏன் பயப்படுகிறார்கள்? என்று நினைத்தேன். உட்கார்ந்து பேசும்போது தான் உண்மை தெரிந்தது. இந்த படத்தில் நடிக்கும் போது ரொம்ப பயமாக இருந்தது. கத்தி மேல் நடக்கிற மாதிரி தான் இருந்தது. கீழே விழுந்தால் காலி செய்து விடுவார்கள். நான் ஒரு டாக்குமென்டரி பார்த்தேன். அதில் உனக்கு ஒரு விஷயம் பயமாக இருந்தால் அதில் இறங்கிடு என்று சொல்லி இருந்தார்கள். அதை வைத்து தான் இந்த படத்தில் நடிக்க களமிறங்கி விட்டேன் என்று கூறியிருக்கிறார்.
கார்த்தி குறித்த தகவல்:
மேலும், கார்த்தி அவர்கள் ‘பருத்தி வீரன்’ என்ற படம் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு மூலம் அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. அதை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. தற்போது இவர் நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.