ஒரு நாளைக்கு 5,000 முறை எம்ஜிஆர் பெயர் சொல்லுறாங்க - நெகிழ்ச்சியில் நடிகர் கார்த்தி
தமிழ் சினிமா உலகில் பிரபமான நடிகர்களில் ஒருவராக கார்த்தி திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வா வாத்தியார். இது கார்த்தி உடைய 26வது படம். இந்த படத்தை இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு கீர்த்தி செட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்தராஜ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த படம் வருகிற 12-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி, வா வாத்தியார் படத்தில் ரொம்ப பக்தியுடன் நடித்திருக்கிறேன். இந்த படத்தை பார்க்கும்போது எம்ஜிஆருக்கும் அவருடைய ரத்தத்தின் ரத்தமான ரசிகர்களுக்கும் என்ன உறவு இருந்தது என்பதை நீங்களே புரிந்து கொண்டால் அதை நாங்கள் பெரிய வெற்றியாக பார்க்கிறோம். ஒரு ரசிகனுக்கும் அவனுடைய தலைவனுக்கும் இருக்கிற அந்த உறவை தான் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம்.
வா வாத்தியார் படம்:
அந்த மீசை வரைவதில் இருந்து எம்ஜிஆர் மாதிரி மேக்கப் போடும்போது அவ்வளவு பயமாக இருக்கும். எப்படி இருந்திருப்பார் என்று யோசித்தாலே நமக்கு தலை எல்லாம் சுத்தும். எம்ஜிஆரை ஏன் வாத்தியார்ன்னு சொல்றாங்க என்றால், எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எல்லாத்துக்கும் பாதை போட்டு கொடுத்தது அவர்தான். அதனால் தான் அவர் வாத்தியார். இன்னைக்கு இருக்கிற ஸ்டன்ட் யூனியன், நடிகர் சங்கம்னு எத்தனையோ சின்ன சின்ன யூனியன் வந்ததெல்லாம் காரணம் அவரால் தான். எப்பவுமே அடுத்தவர்கள் நல்லா இருக்கணும்னு ஒவ்வொரு திட்டத்தையும் பிளான் பண்ணது அவர்தான்.
நிகழ்வில் கார்த்தி:
எல்லோருக்கும் முன்னோடியாக அவர்தான் இருந்திருக்கிறார். எம்ஜிஆர் ஒரு கடல் மாதிரி. அவ்வளவு விஷயம் கிடைக்கிறது. அவரைப் பற்றி பேசினாலே புல்லரிக்கிறது. இன்றும் நீங்கள் அவர் ரசிகர்கள் வீட்டுக்கு போனால் அவருடைய புகைப்படத்திற்கு பொட்டு வைத்து மாலை போட்டு சாமியாக கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு ஐகான். அவர் வெறும் நடிகர் மட்டும் இல்லை ஒரு எமோஷன், ஒரு தனி சகாப்தம். அவர் வாழ்க்கையில் பார்க்காத கஷ்டமே கிடையாது. சினிமாவில் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டு அரசியலிலும் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்தவர். அவர் பாடல்கள் மூலமாக அவ்வளவு விஷயங்களை சொல்லிக் கொண்டு போயிருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=i3yUGO8OoXM
எம்,ஜி,ஆர் பற்றி சொன்னது:
தன்னம்பிக்கை வேண்டும் என்றால் இன்னைக்கும் அவருடைய பாடல்கள் தான் நமக்கு உதாரணமாக இருக்கும். அவரைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். அதற்கு உதாரணமாக எம்ஜிஆர் இருக்கிறார். நம்முடைய சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு அவருடைய பெயர் தான் வைத்திருக்கிறார்கள். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 400 ரயில் இங்கிருந்து கிளம்புகிறது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 5000 தடவை அவருடைய பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போயிருக்கிறார் எம்ஜிஆர் என்று கூறி இருக்கிறார்.