ட்ரூ காலரில் போன் நம்பர கண்டுபிடிக்கலாமே- விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கார்த்தி
மெய்யழகன் படம் குறித்து நடிகர் கார்த்தி கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களாக திகழும் அரவிந்த்சாமி-கார்த்தி நடிப்பில் வெளிவந்த படம் தான் ‘மெய்யழகன்’. இந்த படத்தை ’96’ பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D நிறுவனம் தயாரித்திருக்கிறது.
சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. மேலும், இந்த படத்தினுடைய வெற்றி கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்று இருந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் உட்பட பலர் கலந்து இருந்தார்கள். அப்போது விழாவில் நடிகர் கார்த்தி, ஒருவர் தன்மீது பாசமாக வைத்திருப்பவருடைய பெயர் கூட தெரியாமல் இருப்பதை நினைத்து வருத்தப்படுவார். அதை கண்டுபிடிக்க முயற்சிப்பார். ஆனால், பலருமே ட்ரூ காலர் போட்டாலே பெயர் தெரிந்து விடும். இது கூட தெரியாதா என்றெல்லாம் விமர்சித்து இருந்தார்கள். உண்மையில் அது அப்படி இல்லை.
https://www.youtube.com/shorts/NjPv2EdrI04?si=RcnjAsRuIxSMz33r
கார்த்தி சொன்ன விஷயம்:
ஒருத்தர் மீது அதிக அன்பு, பாசம், மரியாதை வைத்திருந்து அவருடைய பெயர் கூட தெரியவில்லையே என்று அந்த நபர் வருத்தப்பட்டு, அவரிடம் மன்னிப்பு கேட்டு அவரின் பெயரை தெரிந்து கொள்வதை தான் இந்த படத்தில் உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கிறார்கள். அதை தான் அரவிந்த்சாமி சார் உணவுப்பூர்வமாக நம் கண்முன் காண்பித்திருப்பார். ட்ரூ காலரில் போட்டு பாத்து நம்பர் இருக்கு என்று சொல்வது பெரிய விஷயம் இல்லை. ஒருவர், மனதார மன்னிப்பு கேட்க உண்மையாக இருப்பது என்று கூறியிருக்கிறார்.
மெய்யழகன் படம்:
படத்தில் நடிகர் அரவிந்த்சாமி சொத்து பிரச்சனையின் காரணமாக உறவினர்களுடன் சண்டை போட்டு தன்னுடைய சின்ன வயதிலேயே, தான் உயிருக்கு உயிராக நேசித்த வீட்டையுமே காலி செய்து தன் குடும்பத்துடன் சென்னைக்கு சென்று விடுகிறார். பின் தங்கையுடைய திருமணத்திற்காக 22 வருடங்கள் கழித்து தன்னுடைய சொந்த ஊருக்கு வர வேண்டிய கட்டாயம் வருகிறது. அப்போது தான் கார்த்திக் உடைய என்ட்ரி ஆரம்பிக்கிறது.
படத்தின் கதை:
‘அத்தான் அத்தான்’ என்று அரவிந்த் சுவாமியை சுற்றி சுற்றி கார்த்தி செல்கிறார். ஆனால், அவரின் பெயரை தவிர வேற ஒன்றும் அரவிந்தசாமிக்கு தெரியவில்லை. இருந்தாலும், கார்த்தி கஷ்டப்படக்கூடாது என்பதற்காக தெரிந்தது போல காட்டிக் கொள்கிறார் அரவிந்த்சாமி. பின் கார்த்தியால் சென்னைக்கு போகும் பஸ்ஸை அரவிந்த்சாமி தவறவிடுகிறார். அதற்குப்பின் அவருடனே அரவிந்த்சாமி தங்கியும் விடுகிறார்.
படம் குறித்த தகவல்:
ஒரு நாள் இரவு முழுவதும் கார்த்திக்குடன் குடித்துவிட்டு, அரட்டை அடித்து கொண்டு அரவிந்த்சாமி தன்னுடைய பழைய விஷயங்களை எல்லாம் பகிர்ந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் தன் மீது பாசமாக இருக்கும் கார்த்தியை பற்றி எதுவுமே நமக்கு தெரியவில்லையே என்ற வேதனையில் அவரிடம் சொல்லாமலேயே வீட்டில் இருந்து அரவிந்த்சாமி கிளம்பி விடுகிறார். கடைசியில் கார்த்தி யார் என்று அரவிந்த்சாமி தெரிந்து கொண்டாரா? கார்த்திக்கும் அரவிந்த்சாமிக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதி கதை.