'டேய் அவன நடிக்க மட்டும் சொல்லுங்கடா'- மேடையிலேயே சித்தார்த்தை கலாய்த்த கார்த்தி
சித்தார்த் குறித்து கார்த்தி கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை, எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. சமீப காலமாகவே சித்தார்த் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியாகி இருந்த சித்தா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஸ்ரீ உட்பட பல நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் எழுதி இயக்கி இருக்கிறார். இதை அடுத்து தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மிஸ் யூ. இந்த படத்தை செவன் மைல் பெர் செகண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
மிஸ் யூ படம்:
இந்த படத்தில் சித்தார்த், ஆஷிகா ரங்கநாத், ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை இயக்குனர் N. ராஜசேகர் இயக்கியிருக்கிறார். இவர் இதற்கு முன்பு மாப்பிள்ளை சிங்கம், களத்தில் சந்திப்போம் போன்ற படங்களை இயக்கியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வருகிற 29ஆம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை தமிழகம் எங்கும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=PQlz69_aAz0
ட்ரெய்லர் விழாவில் கார்த்தி:
இந்நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்திக் கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்டு இருந்தார். அப்போது விழாவில் நடிகர் கார்த்திக், இங்க வந்து கொஞ்ச நேரத்திலேயே எனக்கு அசிஸ்டன்ட் இயக்குனராக வேலை பார்த்த ஞாபகம் தான் வந்தது. காரணம், சித்தார்த் முதல் நாள் படப்பிடிப்பில் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தோம். அவன் போய் அங்கிருக்கும் எல்லோருக்குமே நடிப்பு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். பேக்ரவுண்ட் செக் பண்ணிக் கொண்டிருந்தான். இது மணி சாரலே தாங்கவே முடியவில்லை.
https://www.youtube.com/watch?v=6SdrAzvLFV0
சித்தார்த் குறித்து சொன்னது:
டேய் பேசாம அவன நடிக்க மட்டும் சொல்லுங்கடா என்றெல்லாம் சொன்னார். இப்போ வந்து பார்க்கிறேன் அதே வேலையை தான் அவன் செய்து கொண்டிருக்கிறான். இங்கேயும் லைட்டை திருப்புங்க, கதவை மூடுங்கள் என்று பேசிக் கொண்டே இருக்கிறார். டேய் நீ கொஞ்சம் அமைதியா இருடா. இந்த படத்தினுடைய டைட்டில் மிஸ் யூ. நம்ம பசங்க அதிகமாக யூஸ் பண்ணும் வார்த்தை தான் லவ் யூ, மிஸ் யூ. பசங்க சோசியல் மீடியாவுல போடும் போஸ்டர்கள் எல்லாமே லவ் போஸ்ட்டுகளாகத் தான் இருக்கிறது. எனக்கு விஜய் சார் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படம் ரொம்ப பிடிக்கும். இப்போதும் அது போன்ற படங்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறையவே இருக்கிறது. பாய்ஸ் சித்தார்த் என்பதால் அவர் மட்டும் இன்னும் லவ் பண்ணி கொண்டே இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=bJazJ4j3x9k
படம் குறித்து சொன்னது:
பார்ப்பதற்கு அப்படியேதான் இருக்கிறார். அது அவருக்கு பெரிய வசதியாக இருக்கிறது. இது இயக்குனர் உடைய மூன்றாவது படம். இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும். சித்தார்த், நண்பர் மிலித்துக்காக
படம் பண்ணியதும், சித்தா படத்திற்கு அவ்வளவு கவனம் எடுத்துக்கொண்டு செய்ததும், படத்தின் ப்ரோமோஷனுக்கு அவ்வளவு மெனக்கட்டதுமே ரொம்ப பெரிய விஷயம். சென்னை வெள்ளத்தை மறக்க முடியாது. அதில் நீ செய்த விஷயங்கள் எல்லோருக்குமே ஒரு தூண்டுகோலாக இருந்தது. நல்ல விஷயங்களை திரும்ப திரும்ப பேசிக் கொண்டே இருப்பது அவசியமாக இருக்கிறது என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.