திருமண பேச்சை ஆரம்பித்த பின்னர் தான் எங்க ரெண்டு பேருக்கே தெரியும்- திருமணத்திற்க்கு பின் கதிர் அளித்த பேட்டி.

By Rajkumar · 10/5/2020

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் கதிரும் ஒருவர். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்குள் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமானார் கதிர். இவர் 2013ம் ஆண்டு வெளிவந்த மதயானைக்கூட்டம் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள், ஜடா போன்ற பல படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், நடிகர் கதிர் ஈரோட்டைச் சேர்ந்தவர். ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபர் வாசுதேவன், ஜெயந்தி தம்பதிகளின் மகள் சஞ்சனாவை நடிகர் கதிர் திருமணம் செய்து கொண்டார்.

சஞ்சனா பிசினஸ் படிப்பில் பட்டம் பெற்றவர். இவர்களுடைய திருமணம் 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட அரேஞ்ச் மேரேஜ். இந்நிலையில் நடிகர் கதிர் அவர்கள் தன்னுடைய மனைவி பத்தி திருமணம் நடப்பதற்கு முன்னாடி பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு கல்யாணம் ஆகபோகுது என்று சொன்னாலே அனைவரும் என்னை விக்ரம் வேதா படத்தில் வரும் சின்ன பையன் புலியாகவே பார்க்கிறார்கள்.

எங்களுடைய திருமணம் பக்கா அரேஞ்ச் மேரேஜ். இரு வீட்டாரும் பேசி முடித்துவிட்டு பின்பு தான் நாங்கள் கோயிலில் சந்தித்து பேசினோம். நான் முதன் முதலில் சஞ்சனாவை கோயிலில் தான் பார்த்தேன். பின் அவரிடம் பேசினேன். சினிமாவில் நடிப்பதால் வருகிற மனைவி என்னை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதை போலவே என்னுடைய மனைவியும் எனக்கு அமைந்தார். ஒரு முறை சஞ்சனாவும், நானும் சின்ன வயசுல இருக்கிற போட்டோக்களை எல்லாம் சேர்த்து பிரேம் பண்ணி சஞ்சனா எனக்கு கொடுத்தார்கள்.

சஞ்சனாவும் ஈரோடு தான். அவங்களும் நானும் ஒரே ஸ்கூல் தான் படித்தோம். ஆனால், எங்களுடைய திருமண பேச்சை ஆரம்பித்த போது தான் இந்த விஷயமே எங்களுக்கு தெரிந்தது. நாங்க ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்ல படித்தோம் என்று திருமணம் போது தான் எங்களுக்கு தெரிய வந்தது என்று புன்னகையுடன் கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு நண்பன் கதாபாத்திரத்தில் கதிர் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த படத்தின் மூலம் கதிருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தது. தற்போது இவர் நவீன் நெஞ்சுடன் இயக்கத்தில் சத்துரு, ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் சிகை, பிரபாகரன் இயக்கத்தில் சர்பத் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

behindtalkies AMP · Quick view
View full