கர்நாடக அரசு விருது 2019: சிறந்த நடிகருக்கான விருதை வாங்க மறுத்த கிச்சா சுதீப் - இது தான் காரணமாம்
கர்நாடக விருதை கிச்சா சுதீப் மறுத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னட சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சுதீப். ராஜமௌலி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான ‘நான் ஈ’ படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் கன்னட நடிகர் சுதீப். தமிழில் இவர் பரிட்சயமான நடிகர் இல்லை என்றாலும் கன்னட திரை துறையில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
நான் ஈ படத்தை தொடர்ந்து இவர் தமிழில் விஜய் நடித்த ‘புலி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் பாகுபலி, முடிஞ்சா இவன புடி போன்ற சில படங்களில் நடித்து இருந்தார். அதற்கு பின் இவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. மேலும், கன்னடத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியையும் இவர் தான் தொகுத்து வழங்கி இருந்தார். அதன் பின் இவர் தெலுங்கில் சில படங்களில் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
கிச்சா சுதீப் திரைப்பயணம்:
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் மேக்ஸ். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் கர்நாடக அரசு கொடுத்த விருதை கிச்சா சுதீப் நிராகரித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, வருடம் வருடம் கர்நாடக அரசு நடிகர், நடிகைகளை அங்கீகரிக்கும் வகையில் விருது வழங்கப்படும். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு கோவிட் காரணமாக கர்நாடக அரசின் விருதுகள் வழங்கவே படவில்லை.
கர்நாடக அரசு விருது:
தற்போது 2019 ஆம் ஆண்டுக்கான விருதுகளை கர்நாடக அரசு அறிவித்து இருக்கிறது. இன்னும் 2020 முதல் 2024வது வரையிலான விருதுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. தற்போது 2019 ஆம் ஆண்டுக்கான விருது பட்டியலில் பயில்வான் படத்திற்காக சிறந்த நடிகர் என்ற பிரிவில் கிச்சா சுதீப்புக்கு விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கிச்சா சுதீப் அரசு கொடுத்த விருதை நிராகரித்து இருக்கிறார்.
கிச்சா சுதீப் பதிவு:
இந்த நிலையில் இது தொடர்பாக கிச்சா சுதீப் வெளியிட்ட பதிவில், மதிப்பிற்குரிய கர்நாடக அரசு மற்றும் நடுவர் குழுவினருக்கு, சிறந்த நடிகர் பிரிவில் விருது பெறுவது எனக்கு பெரிய மரியாதையாக பார்க்கிறேன். இந்த மரியாதையை எனக்கு வழங்கியதற்கு ரொம்ப நன்றி. இருந்தாலுமே சில தனிப்பட்ட காரணங்களால் பல ஆண்டுகளாக நான் எந்த விருதுகளையும் வாங்கவில்லை. அதையே இனி தொடர விரும்புகிறேன். இந்த கலைக்கு உயிர் கொடுத்த பல தகுதியான நடிகர்கள் இருக்கிறார்கள்.
Respected Government of Karnataka and Members of the Jury,
— Kichcha Sudeepa (@KicchaSudeep) January 23, 2025
It is truly a privilege to have received the state award under the best actor category, and I extend my heartfelt thanks to the respected jury for this honor. However, I must express that I have chosen to stop receiving…
விருதை மறுத்த காரணம்:
இந்த விருதுக்கு என்னை விட அதிக தகுதியானவர் ஒருவருக்கு இந்த விருதை கொடுத்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். விருதுகளை பொருட்படுத்தாமல் முழு மனதுடன் அனைவரையும் மகிழ்விக்க விரும்புகிறேன். நடுவர் குழுவின் இந்த அங்கீகாரம் எனக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இந்த அங்கீகாரமே எனக்கு போதுமானது. இந்த முடிவால் ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.