மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற இடத்தில் புதுப்பட வாய்ப்பு - நெகிழ்ச்சியில் நடிகர் கிங்காங்

By subhashini · 26/6/2025

தன் மகளின் திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற இடத்தில் நடிகர் கிங்காங் புதுப்பட வாய்ப்பு கிடைத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நகைச்சுவை நடிகர் கிங் காங். இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதுமட்டும் இல்லாமல் இவருடைய உண்மையான பெயர் பாதி பேருக்கு தெரியாது. நடிகர் கிங் காங் உடைய உண்மையான பெயர் ‘சங்கர்’.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்து வெற்றி நடை போட்ட ‘அதிசய பிறவி’ என்ற படத்தின் மூலம் தான் நடிகர் கிங் காங் அவர்கள் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் கிங் காங் ஆடிய டான்ஸ் இப்போது பார்த்தால் கூட சிரிப்பை அடக்க முடியாது. அந்த அளவிற்கு தூளாக இருந்தது. அதன் பிறகு தான் நடிகர் கிங்காங்க்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் குவிந்தன. இதுவரை இவர் ஐந்து மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கிங் காங் குறித்த தகவல்:

இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் தன்னுடைய நடிப்பு திறனால் மக்களிடையே பாராட்டுகளை பெற்றவர். இவர் அதிகமாக காமெடி நடிகர் விவேக், வைகை புயல் வடிவேலுடன் காமெடி செய்யும் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் பயங்கரமாக இருக்கும். நடிகர் கிங் காங் அவர்கள் 90 கால கட்டங்களில் கவுண்டமணி, செந்தில் போன்ற பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார்.

கிங் காங் குடும்பம்:

இதற்கிடையில் இவர் கலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பெண்கள், ஒரு மகன் இருக்கிறார்கள். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கிங் காங் தனது மகனுடன் கலந்து விளையாடி இருந்தார். இதை அடுத்து இவர் நிகழ்ச்சி, படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் கிங் காங் தன்னுடைய மகளுக்கு திருமண ஏற்பாடு செய்திருக்கிறார்.

கிங் காங் மகள் திருமணம்:

வருகிற ஜூலை 10ஆம் தேதி சென்னை அசோக் பில்லர் பகுதியில் இருக்கும் எம்பிகே மஹாலில் தான் கிங்காங் மகளின் திருமணம் நடைபெறுகிறது. இதை அடுத்து நடிகர் கிங்காங் அவர்கள் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலருக்குமே தன்னுடைய மகளின் திருமண அழைப்பிதழை கொடுத்து வருகிறார். அந்த வகையில் கிங்காங் அவர்கள் இயக்குனரும், நடிகருமான டி. ராஜேந்திரனின் வீட்டிற்கு சென்று திருமண அழைப்பிதழை கொடுத்திருக்கிறார்.

கிங் காங் புதுப்பட வாய்ப்பு:

அப்போது டி.ராஜேந்திரன், உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்கள் என் படத்தில் நடிக்கவே இல்லை. நான் ஒரு படம் ஒன்னு பண்ண போகிறேன். அதில் சின்ன கதாபாத்திரம் ஒன்று இருக்கிறது. அதில் நீங்கள் தான் நடிக்கணும் என்று கூறியிருக்கிறார். இந்த சந்தோஷமான செய்தியை கிங் காங் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், என்னுடைய மகள் திருமண பத்திரிகை கொடுக்கப் போன இடத்தில் புது பட வாய்ப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் டி.ராஜேந்திரன். இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full