கிங் காங்கின் பிறந்தநாளிலேயே இறந்த தாயார் - கடைசியாக அவர் சொன்ன வார்த்தை

By Arun · 18/8/2024

நடிகர் கிங் காங் அவர்களின் தாயார் மறைந்திருக்கும் செய்தி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகர் கிங் காங். இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதுமட்டுமில்லாமல் இவருடைய உண்மையான பெயர் பாதி பெயருக்கு தெரியாது. இவருடைய உண்மையான பெயர் 'சங்கர்'. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து வெற்றி நடை போட்ட 'அதிசய பிறவி' என்ற படத்தின் மூலம் தான் நடிகர் கிங் காங் அவர்கள் தமிழ் சினிமா உலகத்திற்கு அறிமுகமானார்.

இந்த படத்தில் நடிகர் கிங்காங் ஆடிய டான்ஸ் இப்போது பார்த்தால் கூட சிரிப்பை அடக்க முடியாது. அந்த அளவிற்கு தூளாக இருந்தது. பிறகுதான் நடிகர் கிங்காங் அவர்களுக்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் நிறைய வந்து குவிந்தன. இதுவரை இவர் ஐந்து மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பழமொழி படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனால் மக்களிடையே பாராட்டுகளை பெற்றவர்.

கிங்காங் செய்த சாதனை:

மேலும், இவர் நடித்த படங்களின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றவர். இவர் அதிகமாக காமெடி நடிகர் வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் பயங்கரமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் சிரித்து சிரித்து வயிறு வலிக்கும் அளவிற்கு இவரின் காமெடி இருக்கும். மேலும், நடிகர் கிங்காங் அவர்கள் 1990 காலகட்டங்களில் தமிழ் சினிமாஉலகில் பிரபலமான கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

கிங் காங் குடும்பம்:

அதோடு நடிகர் கிங்காங் அவர்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலூரில் உள்ள ஒரு பல்கலைக்கழக கல்லூரியில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கி இருந்தார்கள். இதனைத் தொடர்ந்து சினிமாவில் இவருடைய நடிப்பு திறனுக்காக தேசிய விருது வழங்கி இருந்தார்கள். இது ஒரு பக்கம் இருக்க இவர் கலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

கிங் காங் தாயார் மரணம்:

இப்படி நன்றாக போய்க் கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. இன்று அதிகாலை நடிகர் கிங்காங் அவர்களின் தாயார் இறைவனடி சேர்ந்தார். நடிகர் கிங் கானின் தாயார் பெயர் காசி அம்மாள். இவருக்கு வயது 72 ஆகும். அவர் இன்று அதிகாலை 1.30 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இன்று ஆகஸ்ட் 18 ஆம் தேதி தேதி நடிகர் கிங் காங்கின் பிறந்த நாளும் ஆகும்.

கிங் காங் பிறந்தநாள்:

அதாவது, இன்று அதிகாலை 12.30 மணிக்கு நடிகர் கிங் காங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூட அவரது தாயார் தெரிவித்திருக்கிறார். அதற்குப் பிறகு சற்று நேரத்தில் அவர்கள் தாயார் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலம் ஆகியுள்ளார். இதனால் நடிகர் கிங் காங் மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறார். தற்போதுநடிகர் கிங் காங்கின் இந்த இழப்புக்கு உறவினர்கள், திரைத்துறை நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full