கிங் காங் மகளை திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளை யார் தெரியுமா? இதோ புகைப்படம்
நடிகர் கிங் காங் மகள் திருமணம் செய்ய இருக்கும் மருமகனின் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நகைச்சுவை நடிகர் கிங் காங். இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதுமட்டும் இல்லாமல் இவருடைய உண்மையான பெயர் பாதி பேருக்கு தெரியாது. நடிகர் கிங் காங் உடைய உண்மையான பெயர் ‘சங்கர்’.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்து வெற்றி நடை போட்ட ‘அதிசய பிறவி’ என்ற படத்தின் மூலம் தான் நடிகர் கிங் காங் அவர்கள் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் கிங் காங் ஆடிய டான்ஸ் இப்போது பார்த்தால் கூட சிரிப்பை அடக்க முடியாது. அந்த அளவிற்கு தூளாக இருந்தது. பிறகு தான் நடிகர் கிங் காங் அவர்களுக்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் நிறைய வந்து குவிந்தன. இதுவரை இவர் ஐந்து மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கிங் காங் செய்த சாதனை:
இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் தன்னுடைய நடிப்பு திறனால் மக்களிடையே பாராட்டுகளை பெற்றவர். மேலும், இவர் நடித்த படங்களின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றவர். இவர் அதிகமாக காமெடி, நடிகர் வைகை புயல் வடிவேலுடன் காமெடி செய்யும் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் பயங்கரமாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் சிரித்து சிரித்து வயிறு வலிக்கும் அளவிற்கு இவரின் காமெடி இருக்கும்.
கிங் காங் குடும்பம்:
மேலும், நடிகர் கிங் காங் அவர்கள் 1990 கால கட்டங்களில் தமிழ் சினிமா உலகில் பிரபலமான கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார். அதோடு நடிகர் கிங் காங் அவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலூரில் உள்ள ஒரு பல்கலை கழக கல்லுரில் கௌரவ ஒரு பட்டத்தை வழங்கி இருந்தார்கள். இதனைத் தொடர்ந்து சினிமாவில் இவருடைய நடிப்புத் திறனுக்காக தேசிய விருது வழங்கி உள்ளார்கள்.
கிங் காங் மகள் திருமணம்:
இது ஒரு பக்கம் இருக்க இவர் கலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கிங் காங் தனது மகனுடன் கலந்து விளையாடி இருந்தார். அதோடு +2 தேர்வில் காமெடி நடிகர் கிங் காங்கின் மகள் நல்ல மார்க் வாங்கி, பாஸ் ஆனதில் நடிகர் கிங்காங் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
மாப்பிள்ளை குடும்பம்:
தற்போது கிங் காங் தன்னுடைய மகளுக்கு திருமண ஏற்பாடு செய்திருக்கிறார். வருகிற ஜூலை 10ஆம் தேதி சென்னை அசோக் பில்லர் பகுதியில் இருக்கும் எம்பிகே மஹாலில் தான் கிங்காங் மகளின் திருமணம் நடைபெறுகிறது. இதை அடுத்து நடிகர் கிங் காங் அவர்கள் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலருக்குமே தன்னுடைய மகளின் திருமண அழைப்பிதழை கொடுத்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் கிங் காங் மகளை திருமணம் செய்ய இருக்கும் மாப்பிள்ளை புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.