மோடிக்கு உணவு கொடுப்பதை விவசாயிகள் நிறுத்த வேண்டும் - பொல்லாதவன் கிஷோர் காட்டம்.

By subhashini · 23/2/2024

டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் தொடர்பாக நடிகர் கிஷோர் இன்ஸ்டாவில் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாகவே நாட்டில் விவசாயி பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. தாங்கள் பயிரிடும் அனைத்து பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தரப்படுவதை சட்டபூர்வமாக வேண்டும் என்று பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் சில கோரிக்கைகள் வைத்திருந்தார்கள்.

மேலும், இது தொடர்பாக கடந்த 13ஆம் தேதி அன்று டெல்லியை முற்றுகையிட்டு விவாசயிகள் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தார்கள். இதனால் போலீசார் போராட்டங்களை தடுக்கும் விதமாக அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் எல்லாம் வீசியும், தடி அடியும் நடத்தி இருக்கிறார்கள். பின் போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் ஆனது. இந்த சண்டையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருந்தது.

நடிகர் கிஷோர் பதிவு:

இது தொடர்பாக பலரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக நடிகர் கிஷோர் பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், விவசாயிகள் போராட்டத்தை தடுக்க போலீசார் சாலைகள் தோண்டப்பட்டது. சுவர்கள் எழுப்பப்பட்டது, குழிகள் வெட்டப்பட்டது. பின் துப்பாக்கி குண்டுகள் பயன்படுத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் எல்லாம் வீசப்பட்டது.

View this post on Instagram

A post shared by Kishore Kumar Huli (@actorkishore)

மோடி குறித்து சொன்னது:

ஒவ்வொரு நாளும் இதெல்லாம் அரசாங்கத்திற்கு தெரிந்து தான் நடந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் தன்னுடைய வார்த்தையை மாற்றி மாற்றி பேசும் மோடியின் அரசாங்கம் தான் இதையெல்லாம் செய்தது. விவசாயிகள் இனியாவது தங்களுக்கு எதிராக பொய்யான வதந்திகளை பரப்பும் மோடிக்கும் அவருடைய அரசுக்கும் அவரது பக்தர்களுக்கும் உணவு கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

விவசாயிகள் குறித்து சொன்னது:

இந்த நன்றி கெட்டவர்களுக்கு மட்டும் இல்லாமல் தங்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவளிக்கிறார்கள். இத்தனை கருணை உள்ள இவர்கள் தேசவிரோதிகளா? விவசாயிகளை இப்படி நடத்துவதா? என்று பதிவிட்டு இருக்கிறார். தற்போது நடிகர் கிஷோரின் பதிவு தான் இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

கிஷோர் குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கிஷோர். இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் வில்லன் கதாபாத்திரத்திலும் மிரட்டி இருக்கிறார். அதோடு இவர் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க சமீப காலமாக இவர் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். அதில் மோடி அரசுக்கு எதிராக கருத்துகளையும் கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்.

behindtalkies AMP · Quick view
View full