கர்ப்பமாக இருக்கும் போது இப்படி செய்யலாமா? துணிவு நடிகர் மனைவியின் அதிர்ச்சி வீடியோ.

By Manikandan · 8/1/2023

ஜான் கொகைனின் மனைவி பூஜா ராமச்சந்திரன் செய்த செயலை பார்த்து அதிர்ந்து போயிருக்கின்றனர் நெட்டிசன்கள். SS மியூசிக் என்ற டிவி சேனலில் தொகுப்பாளினியாக தனது மீடியா பயணத்தை துவங்கினார் பூஜா ராமச்சந்திரன். அதன் பிறகு நடிகையாக அவதாரம் எடுத்தார் பூஜா ராமச்சந்திரன். நடிகையாக ‘காஞ்சனா’ என்ற சீரியல். முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில் பூஜா நடித்த இந்த ‘காஞ்சனா’ எனும் ஹாரர் த்ரில்லர் ஜானர் சீரியல் ஒளிபரப்பானது.

அதன் பிறகு சின்னத் திரையுடன் நமது பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை பூஜா ராமச்சந்திரன், அடுத்ததாக வெள்ளித் திரையிலும் நுழைந்தார். தமிழில் அடுத்ததாக சொதப்புவது எப்படி, நண்பன், பீட்சா, நண்பேன்டா, காஞ்சனா 2, புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், களம்’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார் பூஜா ராமச்சந்திரன்.2010-ஆம் ஆண்டு ‘SS மியூசிக்’ புகழ் VJ க்ரேயிக்கை திருமணம் செய்து கொண்டார் நடிகை பூஜா ராமச்சந்திரன்.

ஜான் கொக்கன் :

பின்னர் 2017-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்ட பூஜா ராமச்சந்திரன், நடிகர் ஜான் கொக்கனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் கொண்டார். தேதி தான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. ஜான் ஆர்யா நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

துணிவு :

மேலும் ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரமபமானவர் ஜான் கொக்கன். இவர் சார்பட்டா படத்திற்கு முன்பே அஜித்தின் வீரம், ராஜமௌலியின் ‘பாகுபலி’ போன்ற படங்களில் நடித்துள்ளார். அதோடு கேஜிஃப் திரைப்படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் வரும் 11ஆம் தேதி வெளியாகும் அஜித்தின் துணிவு படத்திலும் கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கர்ப்பமான பூஜா :

இந்த இந்நிலையில் இவரும் நடிகை பூஜா ராமச்சந்திரனும் கடந்த 2019 திருமணம் செய்து கொண்டனர். மேலும் சமீபத்தில் இருவரும் புகைப்படத்தை பகிர்ந்து பூஜா ராமச்சந்திரன் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார். மேலும் அந்த பதிவில் தங்களுடைய காதல் சண்டைகள், சிரிப்புகள் நிறைந்ததாக இருந்தது என்றும், விரைவில் தங்களுக்கு ஒரு அதிசயம் வரவிருப்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று கூறியிருந்தார்.

View this post on Instagram

A post shared by Pooja Ramachandran (@pooja_ramachandran)

இப்படி செய்யலாமா :

பூஜா ராமச்சந்திரன் கர்ப்பமாக இருக்கும் நிலையில் தலைகீழாக நின்றபடி யோக செய்யும் வீடியோ பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த பதிவில் "மை லிட்டில் ஒன்" உன்னை சந்திப்பதற்காக தயாராக உள்ளேன் என்று அந்த பதிவில் கூறியிருந்தார். மேலும் பயிற்சியாளர் பக்கத்தில் வைத்துக்கொண்டே இந்த பயிற்சி செய்தகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் வீடியோ பதிவு வைரலாகவே பயிற்சியாளர் இருந்தாலும் கர்ப்பமாக இருக்கும் போது இப்படி தலைகீழாக நிற்கலாமா என்று நெட்டிசன்கள் பதரி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full