'சாமி' பட வில்லனின் பரிதாப நிலை - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் - குமுறும் ரசிகர்கள்
நடிகர் கோட்டா சீனிவாச ராவ்வின் உடல்நிலை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் பாடகரும் ஆவார். இவர் 1978 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த பிராணம் கீரகிடு என்ற படத்தின் மூலம் தான் சினிமாவுலகில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல தெலுங்கு படங்களில் வில்லனாக மாஸ் காட்டி இருக்கிறார்.
இவர் தமிழில் 2003 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியாகியிருந்த சாமி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதைத் தொடர்ந்து இவர் தமிழில் குத்து, ஜோர், ஏய், திருப்பாச்சி, ஜெயசூர்யா, பரமசிவன், கொக்கி, சாதுமிரண்டா, சத்தியம், தனம், பெருமாள், லாடம், ஜகன்மோகினி, சகுனி, தாண்டவம், ஆல் இன் ஆல் அழகுராஜா, மரகத நாணயம் போன்ற பல படங்களில் வில்லனாக மட்டுமில்லாமல் காமெடி கதாபாத்திரங்களும் நடித்திருக்கிறார்.
கோட்டா சீனிவாச ராவ் திரைப்பயணம்:
மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு எந்த அளவிற்கு பிரபலமோ அதே போல் இவருடைய சிரிப்பும் மக்கள் மத்தியில் பிரபலம் என்று சொல்லலாம். அதோடு இவர் அரசியலிலும் கவனம் செலுத்தி இருந்தார். அந்த வகையில் இவர் 1999 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்திருந்தார்.
சீனிவாசா ராவ் குறித்த தகவல்:
தற்போது அவருக்கு 82 வயது ஆகிறது. இதனால் சமீப காலமாகவே கோட்டா ஸ்ரீனிவாச ராவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டிருக்கிறது. வயது முதிர்ச்சி காரணமாக இவருடைய உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. தற்போது அவரால் சரியாக நடக்கக்கூட முடியவில்லை. இதனால் இவர் எந்த படங்களில் நடிக்காமல் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். கடைசியாக இவர் 2023 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஸ்வர்ணசுந்தரி என்ற படத்தில் தான் நடித்திருந்தார்.
சீனிவாசா ராவ் குடும்பம்:
அதற்கு பிறகு இவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் இவர் ருக்மணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். அதில் இவர் மகன் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டார். இவருடைய இறப்பினாலே கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆனார். இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் பந்த்லா கணேஷ் அவர்கள் கோட்டா சீனிவாச ராவை அவருடைய வீட்டிற்க்கே நேரில் சென்று சந்தித்திருக்கிறார்.
சீனிவாசா ராவ் தற்போதைய நிலை:
பின் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். அதில் கோட்டா சீனிவாசா ராவ் ரொம்பவே உடல் மெலிந்து அடையாளமே தெரியாத அளவிற்கு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவருடைய கால்களில் புண்கள் ஏற்பட்டு கட்டுப்போட்ட நிலையிலும் இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலருமே, வேதனையில் அவர் கூடிய விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்றெல்லாம் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.