மகளுக்கு கிடைத்த விருது. மேடையில் முத்தமிட்டு அன்பை பகிர்ந்த கொட்டாச்சி. குயூட் புகைப்படங்கள் இதோ.

By Rajkumar · 12/2/2020

தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கொட்டாச்சி. வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் படத்தில் இணைந்து கலக்கிய கொட்டாச்சியை சமீப காலமாகவே படத்தில் காண முடியவில்லை. இவர் சினிமா உலகில் தன்னை சிறந்த காமெடியனாக நிலைநிறுத்திக் கொள்ள பல போராட்டங்களை செய்து வருகிறார். இந்நிலையில் இவருடைய மகள் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆகி விட்டார்.

கடந்த ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வந்து சூப்பர் ஹிட் கொடுத்த இமைக்காநொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக மானஸ்வி நடித்து இருந்தார். இந்த படத்தில் மானஸ்வி நடிப்பு பாராட்டக்கூடிய வகையில் இருந்தது. இதனாலே இந்த படத்தின் மூலம் மானஸ்வி விரைவாக மக்கள் மத்தியில் பிரபலமானார். பிறகு இருட்டு போன்று பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். மேலும்,இந்த வருடம் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார் படத்தில் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி நடித்து இருந்தார்.

இந்த நிலையில் கொட்டாச்சி மகள் மானஸ்வி மலையாளத்தில் மை சாண்டா என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்ததற்கு இவருக்கு சமீபத்தில் இந்த ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திர விருது மானஸ்விக்கு கிடைத்து உள்ளது. இந்த விருதை தன் தந்தை கொட்டாச்சி உடன் சென்று வாங்கி உள்ளார். அப்போது கொட்டாச்சி அவர்கள் அவருடைய குழந்தை மானஸ்வியை கட்டி அணைத்து தழுவி தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி உள்ளார். அந்த சமயத்தில் எடுத்த புகைப்படம் தற்போது சமூக தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கொட்டாச்சிக்கும், அவருடைய மகள் மான்ஸ்விக்கும் தங்களுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/B8d9RLUpJAl/

தற்போது நடிகை திரிஷா நடிப்பில் வெளி வரவிருக்கும் சதுரங்க வேட்டை படத்திலும் மானஸ்வி திரிஷாவிற்கு குழந்தையாக நடித்து உள்ளார். இந்த படம் கூடிய விரைவில் வெளிவரப் போகிறது. அதோடு தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை நயன்தாரா, திரிஷா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார் மானஸ்வி என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் கொட்டாச்சி சிறந்த நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை என்றாலும் அவருடைய மகள் முன்னணி நடிகர்கள், நடிகைகள் உடன் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full