பல சீரியல்களில் நடித்த இவரை நினைவிருக்கா? 90ஸ் கிட்ஸ்களுக்கு தெரியும். இவர் இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?
வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலும் ஜொலித்தவர் கோவை அனுராதா. இவர் பல சிறந்த நகைச்சுவை நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார். தொலைக்காட்சிகளிலும் இவர் நடித்த நாடகங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர் பல தொடர்களை இயக்கியும் இருக்கிறார். மேலும், இவர் தமிழகத்தின் தலைசிறந்த நாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் என பட்டம் பெற்றவர். இவருடைய நடிப்பு திறமைக்கு பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்று இருக்கிறார். இவர் பல நூல்களையும் எழுதி இருக்கிறார்.
இப்படி புகழ்பெற்ற கலைமாமணி கோவை அனுராதா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய திரைப்பயணம் அனுபவம் குறித்து கூறியிருப்பது, நான் பத்து வயதில் இருந்தே நடிக்கிறேன். என்னை சுற்றி எப்போதும் பசங்க இருந்து கொண்டே இருப்பார்கள். நான் எந்த படத்துக்கு போனாலும் அந்த படத்தை அப்படியே நடித்துக் காட்டுவேன். பாலும் பழமும், பாசமலர் எனும் பா வரிசை படங்கள் எனக்கு எல்லாமே ரொம்ப பிடிக்கும். எம்ஜிஆர், சிவாஜி இரண்டு பேருமே என்னுடைய உயிர். மாதிரி எம்ஜிஆர் தன்னுடைய படங்களில் நல்ல விஷயங்களை சமூகத்திற்கு சொல்லி இருக்கிறார்.
கோவை அனுராதா அளித்த பேட்டி:
அவர் படங்கள் பார்க்கும்போது அவ்வளவு விஷயங்கள் புரியும். நான் ஸ்கூல் படிக்கும்போது சிவாஜி, எம்ஜிஆர் சாரும் இறந்த பிறகு நாம உயிரோடவே இருக்கக் கூடாது என்றெல்லாம் பேசி இருக்கேன். அந்த அளவிற்கு அவர்கள் மீது எனக்கு ஒரு மரியாதை உண்டு. அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு பின்னாடி சினிமாவே இல்லை என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். எம்ஜிஆர் சாரை நேரில் சந்தித்து இருக்கிறேன். அவரை நேரில் பார்த்த சமயம் கடவுளை நேரில் பார்த்த அளவுக்கு சந்தோசமாக இருந்தேன். அதேபோல் சிவாஜி சார் மாதிரி யாராலும் நடிக்கவே முடியாது.