என் படத்துக்கு பேனர், போஸ்டர் வைக்க விடல, ஆனால் - எமோஷனலாக KPY பாலா சொன்ன விஷயம்

By subhashini · 6/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அதற்காக இவர் இரவு பகலாக தன்னை தானே தயார் செய்தார். அந்த வகையில் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் KPY பாலா செய்த காமெடிகளுக்கு அளவே கிடையாது. இதன் மூலம் தான் இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்தும், பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், பாலா அவர்கள் நடிகர் மட்டுமில்லாமல், சமூக சேவை செய்பவரும் ஆவார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். பின் இவர் மலைவாழ் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தந்து இருந்தார்.

சமூக சேவை செய்யும் பாலா:

அதே போல கடந்த ஆண்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து இருந்தார். இதனால் பாலாவை குட்டி ராகவா லாரன்ஸ் என்று சொல்கிறார்கள். தற்போது லாரன்ஸ் நடத்தி வரும் மாற்றம் அறக்கட்டளையில் பாலா இணைந்து சேவை செய்து கொண்டு வருகிறார். தற்போது ஷெரிப் இயக்கத்தில் பாலா நடித்திருக்கும் படம் காந்தி கண்ணாடி. இந்த படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைத்து இருக்கிறார்கள். நேற்று வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

காந்தி கண்ணாடி:

இந்நிலையில் இந்த படத்தை பார்க்க வடபழனி கமலா தியேட்டருக்கு பாலா உட்பட பட குழுவினர் சென்றிருந்தார்கள். அதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாலா, இந்த கமலா தியேட்டரில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக நான் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய வாழ்வின் பெரிய பயணம் இந்த தியேட்டரில் தான் இருக்கிறது. இந்த ஸ்கிரீனில் உட்கார்ந்து நிறைய படம் பார்த்திருக்கிறேன். இப்போது நான் நடித்த படத்தை தியேட்டரில் அமர்ந்து பார்த்திருக்கிறேன். இதெல்லாம் கனவா, நினைவா என்று தெரியவில்லை.

பாலா பேட்டி:

சாதாரண நபர்கள் சேர்ந்து படம் எடுக்க முயன்றும் ஒருவர் தயாரிப்பதாக உதவி செய்தார். ஒரு கட்டத்தில் படம் முடித்து வெளியாகுவதற்கான நாள் கூட குறித்து விட்டோம். ஆனால், படம் வெளியாகுவதற்கு முன்பான கடைசி மூன்று நாட்கள் நாங்கள் பட்ட கஷ்டம் அது எப்படி சொல்வது என்று தெரியவில்லை. படத்துக்கு பேனர் வைக்கப்படவில்லை, போஸ்டர் ஒட்டவில்லை. நிறைய தியேட்டரில் போஸ்டர் இல்லாமல் எங்கள் படம் ஓடவில்லை என நினைத்து மக்கள் திரும்பி சென்றதாகவும் கூறுகிறார்கள். இப்போது கூட எங்கள் படம் கமலா தியேட்டரில் வருகிறது என்ற போது ஹவுஸ் புல் ஆகுமா? என்று சிலர் கலாய்த்தார்கள்.

https://www.youtube.com/watch?v=u2yuSU_ruJA

படத்தின் சிக்கல்:

நான் வந்து சிலருக்கு டிக்கெட் கேட்டபோதுதான் ஹவுஸ் புல் என்று சொன்னார்கள். அப்போதுதான் எங்களுக்கு முழு நம்பிக்கை வந்தது. நிறைய தடங்களை தாண்டி தான் படம் ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த படம் ரிலீஸ் ஆகி இவ்வளவு வரவேற்பு வருகிறது என்றால் அதற்கு மக்கள் தான் காரணம். தமிழ்நாட்டு மக்களுக்கு நான் என்றும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். ஆரம்பத்தில் இருந்து என் மீது நம்பிக்கை வைத்து என்னை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்த என்னை ஹீரோ ஹீரோ என்று சொல்லி என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்த அண்ணன் லாரன்ஸ்க்கு நன்றி என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full