எனக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை, காரணம் இது தான்- நடிகர் KPY பாலா ஓபன் டாக்

By subhashini · 9/9/2025

திருமணம் பற்றி நடிகர் பாலா கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அதற்காக இவர் இரவு பகலாக தன்னை தானே தயார் செய்தார். அந்த வகையில் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் KPY பாலா செய்த காமெடிகளுக்கு அளவே கிடையாது.

இதன் மூலம் தான் இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்தும், பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், பாலா அவர்கள் நடிகர் மட்டுமில்லாமல், சமூக சேவை செய்பவரும் ஆவார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

சமூக சேவை செய்யும் பாலா:

பின் இவர் மலைவாழ் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தந்து இருந்தார். அதே போல கடந்த ஆண்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து இருந்தார். இதனால் பாலாவை குட்டி ராகவா லாரன்ஸ் என்று சொல்கிறார்கள். தற்போது லாரன்ஸ் நடத்தி வரும் மாற்றம் அறக்கட்டளையில் பாலா இணைந்து சேவை செய்து கொண்டு வருகிறார். தற்போது ஷெரிப் இயக்கத்தில் பாலா நடித்திருக்கும் படம் காந்தி கண்ணாடி.

காந்தி கண்ணாடி படம்:

இந்த படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைத்து இருக்கிறார்கள். நேற்று வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், படத்தின் வெளியீட்டுக்கு முன் பல தடைகள் வந்தது என்று நடிகர் பாலா, படத்தின் இயக்குனர் ஷெரிப் பேட்டி அளித்து இருந்தார்கள். குறிப்பாக, படத்தின் பேனரை கிழித்தும், போஸ்டர் கூட ஒட்ட விடவில்லை. நிறை பேருக்கு படம் வந்ததா? என்று கூட தெரியவில்லை.

https://www.youtube.com/watch?v=TJGB_Q_0wiM

பாலா பேட்டி:

பல தடைகளுக்குப் பிறகு தான் இந்த படம் திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் ஈரோடு மாவட்டம் திண்டலில் உள்ள திரையரங்கில் ஆதரவற்ற முதியவர்களுக்காக சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதை பார்க்க வந்த நடிகர் பாலாவும், முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்திருக்கிறார். பின் செய்தியாளர்களை சந்தித்த பாலா, அடுத்தடுத்து தன்னுடைய திட்டங்கள் பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். பின் காந்தி கண்ணாடி படத்திற்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி என்று கூறியிருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=3UIW7U7f87Q

திருமணம் பற்றி சொன்னது:

இதை அடுத்து திருமணம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு பாலா, நான் சம்பாதிப்பது மக்களுக்காக தான். கடைசிவரை இப்படி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். கல்யாணம் பற்றி இப்போது எனக்கு எந்த ஐடியாவுமே கிடையாது. எனக்கு நிறைய கடமைகள் இருக்கிறது. ஐந்து வருடமாக என்னையும் மதித்து மக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்து வருகிறார்கள். மனுக்கள் அளிக்கும் மக்களுக்காக நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். அதனால் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு கிடையாது என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full