தாலாட்டு சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டது ஏன் ? மனமுடைந்து பேசிய கிருஷ்ணா

By subhashini · 30/6/2023

தாலாட்டு சீரியல் திடீரென்று முடிவடைந்ததை குறித்து நடிகர் கிருஷ்ணா அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் கிருஷ்ணா. இவர் கிருஷ்ணா என்பதைவிட தெய்வமகள் பிரகாஷ் என்றால் தான் பலருக்கும் தெரியும். சன் டிவியில் 5 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று தெய்வமகள்.

இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக சத்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் வாணி போஜன். இந்த சீரியலில் பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்திருந்தார் கிருஷ்ணா. மேலும், தெய்வமகள் கிருஷ்ணா சீரியலில் நடிப்பதற்கு முன்பாக பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் அழகிய அசுரா, பத்து பத்து ,ஈரம், பலம், ஆனந்தபுரத்து வீடு போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

கிருஷ்ணா நடித்த சீரியல்:

அதேபோல சன் தொலைக்காட்சியில் கடந்த 2001 ஆம் ஆண்டு ஒளிபரப்பான குகன் என்ற தொடரில் கிருஷ்ணா துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ரன் என்ற சீரியலில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து இவர் தாலாட்டு என்ற சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து தற்போது வரை விறுவிறுப்பாக தான் சென்றது.

தாலாட்டு சீரியல்:

பின்பு இந்த சீரியலை கடந்த வாரம் தான் முடித்துவிட்டார்கள். இது குறித்து ரசிகர்கள் பலரும் ஏன் இந்த சீரியலை முடித்து விட்டீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்கள். இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் கிருஷ்ணா பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, தெய்வமகள் பிரகாஷ் என்ற பெயர் தான் எனக்கு மக்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இன்னும் என்னை பிரகாஷ் என்று தான் மக்கள் கூப்பிடுகிறார்கள். அந்த சீரியல் ஆரம்பத்தில் நான் நெகட்டிவ் ரோலில் நடித்து இருந்தேன்.

கிருஷ்ணா அளித்த பேட்டி:

அதற்கு பிறகு பாசிட்டிவ் ஆக நடிக்க ஆரம்பித்தேன். இதற்கு காரணம் குமரன் சார் தான். அவர் மூலம் தான் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த தொடர் மூலமாக தான் எனக்கு எல்லா பாராட்டுக்களும் கிடைத்தது. இந்த சீரியலில் எனக்கு ஜோடியாக நடித்து இருந்தார்கள். ஆரம்பத்தில் எங்க ரெண்டு பேருக்கும் ஒரு புரிதல் இருந்தது. பின் இந்த சீரியல் மூலம் எங்கள் இருவருக்குமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், திடீரென்று இந்த சீரியலை நிறுத்திவிட்டார்கள்.

https://www.youtube.com/watch?v=pGhK4tbYmgs

தாலாட்டு சீரியல் குறித்து சொன்னது:

இதற்கு காரணம் என்ன என்று எங்களுக்கே தெரியாது. நாங்களே இதை எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையில் சில நேரம் இப்படி தான் நாம் எதிர்பாராதது நடக்கும். அதை நாம் ஏற்றுக் கொண்டுதான் போக வேண்டும். இதனைத்தொடர்ந்து புது சீரியல் ஒன்று ஒளிபரப்பாக இருக்கின்றது. இது கூட ஒரு வகையில் காரணமாக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. நாம் எதிர்பார்க்காதது ஒன்று நடந்தால் நமக்கு கொஞ்சம் சோகமாக தான் இருக்கும். இந்த சீரியல் திடீரென்று முடிவடைந்தது எனக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது. நானும் இன்னொரு நல்ல ப்ராஜெக்ட் உடன் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full