கிறிஸ்டியன்ல இருந்து இந்து மதத்துக்கு போய்ட்டேன் - லிவிங்க்ஸ்டன் சொன்ன காரணத்தால் கடுப்பான நெட்டிசன்கள்.

By Rajkumar · 12/12/2023

நடிகர் லிவிங்ஸ்டன் மதம் மாறியது தொடர்பாக அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் லிவிங்ஸ்டன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றினார். ஆரம்பத்தில் திரைப்படங்களுக்காக இவருடைய பெயரை ராஜன் என்று பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின் 1988 இல் வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். முதலில் இவர் படங்களில் ஹீரோவாக நடித்து இருந்தார். பின் இவர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது இவர் படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

லிவிங்ஸ்டன் திரைப்பயணம்:

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த சுந்தர புருஷன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து சுந்தர புருஷன்- 2 படத்துக்கான திரைக்கதையை தமிழ் சினிமாவில் ரிலீஸ் பண்ணுவதற்கு லிவிங்ஸ்டன் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. கடைசியாக இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்தா படத்தில் நடித்திருந்தார். தற்போதும் இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

லிவிங்ஸ்டன் குடும்பம்:

மேலும், இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகள் ஜோவிகா. இவர் தற்போது சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இருந்தாலும், இவர் சீரியல்களில் நடித்து வருகிறார். முதலில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி கடந்த ஆண்டு முடிவடைந்த பூவே உனக்காக என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு தற்போது இவர் அருவி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

லிவிங்ஸ்டன் பேட்டி:

இந்த நிலையில் லிவிங்ஸ்டன் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், நான் மதம் மாறலாம் என்று நினைத்தேன். கிறிஸ்டியனாக இருந்து எனக்கு போர் அடித்து விட்டது. இதனால் நான் இந்துவாக மாறிவிட்டேன். நான் கிருஷ்ணருடைய பக்தர். அதனால் ஹரே ராமா ஹரே கிருஷ்ணாவில் நான் சேர்ந்து விட்டேன்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

அதனுடைய பொட்டு தான் வைத்திருக்கிறேன் என்று பேசுகிறார். தற்போது இவருடைய வீடியோ வைரலானதை தொடர்ந்து பல கிறிஸ்துவ மதத்தவர்கள் கண்டனம் தெரிவித்து விமர்சித்து வருகிறார்கள்.
எப்படி ஒரு மதம் போரடித்து விடும்? நீ உண்மையாக மதத்தை நேசிப்பவன் இல்லை? என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full