இன்னைக்கு என் மனைவி உயிரோடு இருக்க காரணமே ரஜினி தான் - எமோஷனலாக லிவிங்ஸ்டன் சொன்ன விஷயம்

By subhashini · 9/7/2024

என் மனைவி உயிரை காப்பாற்றியது ரஜினி தான் என்று நடிகர் லிவிங்ஸ்டன் அளித்து இருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் லிவிங்ஸ்டன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றி இருக்கிறார். பின் இவர் 1988 இல் வெளிவந்த 'பூந்தோட்ட காவல்காரன்' என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். முதலில் இவர் படங்களில் ஹீரோவாக நடித்து இருந்தார். பின் இவர் சமீப காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த 'லால் சலாம்' படத்தில் ரஜினிகாந்தின் நண்பராக லிவிங்ஸ்டன் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களின் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கிறது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு வசூல் சாதனை செய்யவில்லை.

லிவிங்ஸ்டன் பேட்டி :

இதைத் தொடர்ந்து இவர் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் லிவிங்ஸ்டன் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் ரஜினிகாந்த் குறித்து சொன்னது, என்னுடைய மனைவிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆபரேஷன் செய்யவில்லை என்றால் காப்பாற்றுவது ரொம்ப கடினம் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். அப்போது என்னிடம் பணம் இல்லை. ஏற்கனவே நான் நிறைய கடனில் இருந்தேன். எங்கு வாங்குவது? என்ன பண்ணுவது? என்று ஒன்றுமே புரியாமல் கவலையில் இருந்தேன்.

https://www.youtube.com/watch?v=ZVEKbLOVodg

ரஜினி செய்த உதவி:

அதுமட்டுமில்லாமல் அப்போது நான் 'லால் சலாம்' படத்தில் ரஜினியுடன் நடித்துக் கொண்டிருந்தேன். இந்த தகவல் எப்படியோ ரஜினிகாந்த் சார் காதில் விழுந்திருக்கிறது. இதை அறிந்த அவர் என்னை கூப்பிட்டு, உங்கள் மனைவிக்கு என்ன பிரச்சனை? எதுவாக இருந்தாலும்? சொல்லுங்கள் என்று கேட்டார். நானும் அவரிடம் என் மனைவியின் உடல்நிலை குறித்து சொன்ன உடனே அவர் 15 லட்சம் ரூபாயை என்னிடம் கொடுத்து உங்கள் மனைவியை காப்பாற்றுங்கள்.

ரஜினி குறித்து சொன்னது:

நீங்கள் எனக்கு தம்பி மாதிரி, எதுவாக இருந்தாலும் கேளுங்கள். இன்னும் பணம் தேவைப்பட்டாலும் என்னை கூப்பிடுங்கள் நான் தருகிறேன் என்று சொன்னார். அவர் அப்படி செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. உடனடியாக என்னுடைய மனைவிக்கு ஆபரேஷன் செய்து அவர் குணமாகி விட்டார். இப்போது என் மனைவி உயிருடன் இருப்பதற்கு காரணம் ரஜினிகாந்த் சார் தான். பைபிளில் ஒரு வாசகம் இருக்கும். 'ஒரு கை செய்யும் உதவி, மறு கைக்கு தெரியக்கூடாது' என்று சொல்வார்கள்.

லிவிங்ஸ்டன் பூஜையறையில் ரஜினி:

அது ரஜினிகாந்த் சார் தான். அவர் எனக்கு மட்டுமில்லாமல் எவ்வளவோ பேருக்கு நிறைய உதவிகளை செய்திருக்கிறார். ஆனால், அது பெரும்பாலும் வெளியே தெரியாது. அவர் ரொம்ப ரொம்ப நல்ல மனிதர். எங்கள் குடும்பத்திற்கு அவர் கடவுள் மாதிரி. என்னுடைய வீட்டில் சாமியறையில் அவருடைய புகைப்படம் இருக்கிறது. என்னுடைய பிள்ளைகளும் அவரை தெய்வமாகத்தான் பார்க்கிறார்கள் என்று எமோஷனலாக பேசி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full