20 வருடம் ஆச்சு, ரொமான்ஸ் படத்தில் நடிக்காத காரணம் இது தான் - உண்மையை உடைத்த நடிகர் மாதவன்
தன்னுடைய சினிமா அனுபவம் பற்றி நடிகர் மாதவன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அலைபாயுதே’ என்ற படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். இவரின் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இடையில் கொஞ்சம் மாதவன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் மாதவன் நடித்த விக்ரம் வேதா, இறுதி சுற்று, மாறா போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சமீபத்தில் மாதவன்-சித்தார்த் நடிப்பில் வெளியாகி இருந்த படம் டெஸ்ட்.
மாதவன் திரைப்பயணம்:
YNOT ஸ்டுடியோ தான் இந்த படத்தை தயாரித்து இருந்தது. அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே இந்த நிறுவனம் மட்டும் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, ஜகமே தந்திரம் போன்ற பல படங்களை தயாரித்திருக்கிறது. இந்த படங்களை எல்லாம் தயாரித்த சசிகாந்த் தான் டெஸ்ட் படத்தையும் இயக்கியிருக்கிறார். சக்தி ஸ்ரீ கோபாலன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து மாதவன் தன் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
மாதவன் பேட்டி:
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி மாதவன், நான் ஹீரோவாக நடித்த இத்தனை படங்களிலேயே என் கூட நடித்த ஒரே தமிழ் ஹீரோயின், அதுவும் கடைசி ஹீரோயினி என்றால் ஷாலினி தான். மத்த ஹீரோயின்களுக்கு தமிழ் சரியாக பேச வராது. இதனால் ரொம்பவே தவித்து விட்டேன். ஏன்னா, மொழி தெரிந்திருந்தால் அவர்கள் ஏற்கனவே எழுதி இருக்க டயலாக் இன்னும் கொஞ்சம் பெட்டராக ஏதாவது பேசி ட்ரை பண்ணுவார்கள். அப்பத்தான் நம்மால் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து இம்ப்ரூவ் பண்ண முடியும். கிட்டத்தட்ட 18 இலிருந்து 20 வருஷம் ஆகிவிட்டது. ரொமான்ஸ் படங்களில் நடிப்பதை விட்டு நான் லைஃப் சவுண்ட் இல்லாமல் படம் பண்ண மாட்டேன். அது விளம்பர படமாக இருந்தாலும் பண்ண மாட்டேன்.
https://www.youtube.com/watch?v=6pBON_i7-l0&t=180s
ரொமான்ஸ் படம் பற்றி சொன்னது:
என்னோட முதல் படத்தில் ஷாலினி தான் ஹீரோயின். நடிப்பு என்றால் வாய்ஸ் மாடுலேஷன், அவங்க பேசுற விதம், அவங்களுக்கு அந்த மொழி தெரிந்திருந்தால் தான் ஏற்கனவே இருக்க டயலாக் மேல எக்ஸ்ட்ரா டயலாக் பேசுவார்கள். அவர்களுக்கு மொழி தெரியவில்லை என்றால் பேப்பரில் எழுதி கொடுத்ததை பேசிட்டு போய்விடுவார்கள். இருக்கிற டயலாக்கை உருப்படியா சொன்னா பெரிய விஷயம் என்று இருக்கும். அதனால் என்னால் படத்தில் வளர முடியவில்லை. இதனால் தான் நான் ரொமான்ஸ் விட்டுட்டேன். அலைபாயுதே மாதிரி ஒரு படம் பண்ணிட்டு அடுத்த அடுத்த படத்தில் ரொமான்ஸ் கொடுக்கக் கூடாது என்று நினைத்தேன். ஷாலினி படபடவென்று தமிழ் பேசுவார். அதிலிருந்து நமக்கு ஒரு ஸ்பார்க் வரும்.
நயன் பற்றி சொன்னது:
அந்த மொழி தெரிந்திருந்தால் தான் அந்த படம் பண்ண முடியும். அப்போதான் டப்பிங்கும் பண்ண முடியும். விக்ரம் வேதா படத்தில் தான் செட்டில் இருக்கிற எல்லோருக்கும் தமிழ் தெரிந்தது. அதனால எங்களுக்கு ஈசியாக போனது. டெஸ்ட் படத்தில் நயன்தாரா டப் பண்ணி இருக்காங்கன்னு எல்லோரும் இப்ப பேசுகிறார்கள். அது தப்பு. அவங்க டப்பிங் பண்ணவே இல்லை. அது லைவ் சவுண்ட். அவங்க படத்துக்காக அவ்ளோ அழகாக பேசி இருக்கிறார்கள். அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பதே அந்த குரலும் டயலாக் தான். நயன்தாரா இந்த படத்தில் பிரமாதமாக பண்ணியிருக்கிறார். அதுவும் இல்லாமல் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடித்த முதல் படம். இந்த மாதிரி ஒரு கோ ஸ்டார் கிடைக்கும் போது நானும் நல்லா நடிக்க வாய்ப்பு கிடைக்கும். டயலாக் பற்றிய பயமில்லாமல் நடித்து பட்டையை கிளப்பலாம் என்று கூறியிருக்கிறார்.