இடையில் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க இது தான் காரணம் - நடிகர் மாதவன் ஓபன் டாக்

By subhashini · 4/2/2026

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அலைபாயுதே’ என்ற படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். இவரின் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இடையில் கொஞ்சம் மாதவன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் மாதவன் நடித்த விக்ரம் வேதா, இறுதி சுற்று, மாறா போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் தமிழில் கடைசியாக மாதவன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் டெஸ்ட்.

மாதவன் குறித்த தகவல்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து சமீபத்தில் பாலிவுட்டில் மாதவன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் துரந்தர். இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. இதை அடுத்து இவர் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு
மாதவன் அவர்கள் தமிழ் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் பிரேக் எடுத்திருந்தார். இது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் நடிகர் மாதவன், விக்ரம் வேதா படத்திற்கு பிறகு தான் என்னுடைய பிரேக் இருந்தது.

மாதவன் பேட்டி:

இறுதி சுற்று படத்திற்கு முன்பே நான் செய்து வந்த வேலைகளால் ரொம்பவே விரக்தி அடைந்து போயிருந்தேன். அதனால் தான் ஒரு இடைவெளி எடுக்க வேண்டி இருந்தது. நான் ஸ்விட்சர்லாந்தில் ஒரு தமிழ் பாடலுக்காக ஷூட்டிங் செய்து கொண்டிருந்தேன். ஆரஞ்சு பேண்ட், பச்சை சட்டை அணிந்து சாலையின் நடுவில் நின்று ஆடிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஒரு ஸ்விஸ் விவசாயி உட்கார்ந்து தேநீர் குடித்த படி எங்களை பார்த்து, இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது போலவே பார்த்து இருந்தார்.
பல திறமைகளை நான் கொண்டு இருக்கிறேன். ஆனால், என்னுடைய படங்களில் அவை எதையும் நான் காட்டவில்லை.

பிரேக் எடுக்க காரணம்:

பார்வையாளர்களைக் கவர்ந்து இழுப்பது மட்டுமே நான் செய்த ஒரு முயற்சியாக இருந்தது. அதன் மூலம் சூப்பர் ஸ்டார் ஆகிவிடலாம் என்றெல்லாம் நினைத்தேன். ஆனால், இப்போதுதான் என் தவறை நான் உணர்ந்தேன். அதற்கு பிறகு தான் நான் விளம்பர படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டேன். சென்னையிலும் இந்தியாவின் பல இடங்களிலும் அதிக பயணம் சென்றேன். அந்த நான்கு ஆண்டுகால அனுபவமும், பெற்ற அறிவும் தான் இப்போது நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். நான் திரும்பி வந்தபோது என்னுடன் பணியாற்றிய பழைய இயக்குனர்கள் நான் எதிர்பார்த்த அளவுக்கு முன்னோக்கு சிந்தனை உள்ளவர்களாக இல்லை என்பதையும் புரிந்து கொண்டேன். அதற்கு பிறகு தான் நான் புதிய இயக்குனர்களை தேட ஆரம்பித்தேன் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full