என் மகனுக்கு அந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் தெரியும் - நடிகர் மாதவன் ஓபன் டாக்
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அலைபாயுதே’ என்ற படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். இவரின் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இடையில் கொஞ்சம் மாதவன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் மாதவன் நடித்த விக்ரம் வேதா, இறுதி சுற்று, மாறா போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தமிழில் கடைசியாக மாதவன் நடிப்பில் வெளியாகி இருந்த டெஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து மாதவன் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
மாதவன் குறித்த தகவல்:
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் மாதவன், குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது என்பது அவர்களுடைய விபரங்கள் தெரியாமல் வளர்ப்பது கிடையாது. அவர்களுக்கு உலகத்தின் எதார்த்தத்தை முன்கூட்டியே புரிய வைப்பது தான் நல்லது. என்னுடைய மகன் வேதாந்திற்கு சின்ன வயதில் இருந்தே எல்லாமே சொல்லிக் கொடுத்துதான் வளர்த்திருக்கிறேன். அவன் சின்ன வயதிலேயே பெரியவர்கள் எடுக்கக்கூடிய முடிவை கூட எடுப்பான். குறிப்பாக பெற்றோர்கள் பேச தயங்கும் பாலியல் ரீதியான தொடுதல், பாலியல் பாதுகாப்பு, கருத்தடை போன்ற விஷயங்களை பற்றி எல்லாம் என் மகனுக்கு நான் டீனேஜ் பருவம் வருவதற்கு முன்பே சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.
மாதவன் பேட்டி:
அவனுக்கு நான்கு வயதில் இருந்தே நான் அனைத்தையும் வெளிப்படையாக பேசி வருகிறேன். இது அவருக்கும் எனக்குமான நம்பிக்கை அதிகரித்தது.
இந்த வெளிப்படையான அணுகுமுறை. என்னுடைய மகனுக்கு என் மீது ஒரு பெரும் மரியாதை ஏற்படுத்தியது. அவனை ஒரு பொறுப்புள்ள இளைஞராக மாற்றவும் உதவியது. சினிமா நட்சத்திரங்களுடைய வாரிசாக இருப்பதால் ஏற்படும் தேவையற்ற செல்வாக்குகள், தேவையில்லாத புகழ், பெண்களை எப்படி மரியாதை நடத்த வேண்டும் என்பதை எல்லாம் என் மகனுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன். இதன் மூலமாக அவன் வெளிஉலக அழுத்தங்களை எளிதாக கையாள முடியும்.
மகன் பற்றி சொன்னது:
ஒரு தேசிய விருது பெற்ற நடிகர் என்ற பிம்பம் என் மகனுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. சினிமா உலகில் இருக்கும் பல தந்தைகள் தங்கள் பிள்ளைகளை தங்களின் திரைப்படத்தை தொடர வேண்டும் என்று இருப்பார்கள். ஆனால், நான் இதில் முற்றிலுமே மாறுபட்டவன். என்னுடைய மகன் என் நிழலில் வளராமல் தனக்கான ஒரு பாதையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதனால் தான் தற்போது சர்வதேச அளவில் நீச்சல் போட்டிகளில் என்னுடைய மகன் பதக்கங்களை வென்றிருக்கிறார். நான் அவருக்கு கொடுத்த அந்த சுதந்திரத்தையும்
பாடத்தையும் மிகச் சரியாகப் பயன்படுத்தி வருகிறார் என்று கூறுகிறார்.