மாதவனின் அதிரடி வெயிட் லாஸ் சேலஞ்- 21 நாட்களில் இவ்வளோ மேஜிக்கா? அவரே சொன்ன தகவல்
ஜிம்முக்கு போகாமல் உடல் எடையை குறைப்பது எப்படி என்று மாதவன் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், படத் தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ என்ற படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். இவரின் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
மாதவன் திரைப்பயணம்:
இடையில் கொஞ்சம் மாதவன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் சமீப காலமாக மாதவன் நடித்த விக்ரம் வேதா, இறுதி சுற்று, மாறா போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ஆரம்பத்தில் சினிமாவில் நுழைந்த போது சாக்லட் பாய் என்ற முத்திரையுடன் வந்த மாதவன் தற்போது ஒரு சிறந்த நடிகராக விளங்கி வருகிறார்.
மாதவன் பேட்டி:
தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியில் மாதவன், நான் உடல் எடையை குறைப்பதற்கு எந்த உடற்பயிற்சியும், ஜிம்முக்கும் செல்வதில்லை. நான் உடல் எடையை குறைக்க காரணம், நல்ல உணவை நன்றாக மென்று ரசித்து சாப்பிடுவேன். ஒரு நாளைக்கு 40 முதல் 60 முறை தண்ணீர் குடிப்பேன்.
உடல் எடை குறைப்பு குறித்து சொன்னது:
மாலை 7:00 மணிக்கு உள்ளேயே நான் உணவை சாப்பிட்டு விடுவேன். அதிகாலை, தூங்குவதற்கு முன்பும் 90 நிமிடம் நடைபயிற்சி செய்வேன். இயற்கையான உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவை மட்டும் தான் எடுத்துக் கொள்வேன். இப்படி செய்தால் 21 நாட்களிலேயே உடல் எடை குறைந்துவிடும். இதை நான் செய்தேன். எனக்கு நல்ல ரிசல்ட் கிடைத்தது. எந்த ஜிம்முக்கும், உடற்பயிற்சியும் நான் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=rTat_S19lMI
உணவு உண்ணும் முறை:
மாலை 3 மணிக்கு பின் பச்சையாக எதையும் சாப்பிடக் கூடாது. இரவு சீக்கிரமாக தூங்கிவிட வேண்டும். தூங்க செல்வதற்கு முன்பு ஒன்றரை மணி நேரத்திற்கு டிவி, செல்போன், லேப்டாப் என எதையும் பார்க்க கூடாது. நிறைய திரவங்களை உட்கொள்ள வேண்டும். நீங்கள் நிறைய பச்சை காய்கறிகளை உண்ண வேண்டும் என்று கூறியுள்ளார்.