பத்திரிக்கை கூட தரல ஆனா விஜய் சேதுபதி இத பண்ணார் - எமோஷனலாக நடிகர் மணிகண்டன் சொன்னது

By subhashini · 26/1/2025

விஜய் சேதுபதி குறித்து எமோஷனலாக நடிகர் மணிகண்டன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக மணிகண்டன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பீட்சா 2 வில்லா என்ற படத்தில் துணை இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த இந்தியா பாகிஸ்தான் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதை தொடர்ந்து இவர் காதலும் கடந்து போகும், எட்டு தோட்டாக்கள், விக்ரம் வேதா போன்ற பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். குறிப்பாக, இவர் விக்ரம் வேதா படத்தில் டயலாக் ரைட்டராக
இருந்தார். இதற்காக இவருக்கு சில விருதுகளுமே கிடைத்திருந்தது. அதற்குப்பின் இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருந்த காலா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மகனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தார்.

மணிகண்டன் திரைப்பயணம்:

இதை தொடர்ந்து இவர் சில்லு கருப்பட்டி, நெற்றிக்கண் போன்ற பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கான ஒரு அங்கீகாரத்தை பிடித்தார். அதற்குப்பின் சூர்யா நடிப்பில் மற்றும் தயாரிப்பில் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியிருந்த ஜெய் பீம் படத்தில் மணிகண்டன் அவர்கள் ராஜகண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதை தொடர்ந்து இவர் குட் நைட், லவ்வர் போன்ற அடுத்த அடுத்த ஹிட் படங்களில் நடித்து வந்தார்.

குடும்பஸ்தன் படம்:

இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார் என்று சொல்லலாம். தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் குடும்பஸ்தன். இந்த படம் சினிமாக்காரன் எஸ். வினோத் தயாரிப்பில் இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கி வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் மணிகண்டன் மற்றும் சான்வி மேகனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இணைந்து குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

மணிகண்டன் பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனின்போது மணிகண்டன் அளித்த பேட்டியில் விஜய் சேதுபதி குறித்து கூறியிருப்பது, விஜய் சேதுபதி அண்ணாவை எனக்கு காதலும் கடந்து போகும் படத்தின் போது இருந்தே தெரியும். அவர் ஷூட்டிங் வருவார், நடிப்பார், போயிடுவார். ஓருநாள் திடீரென்று மழை வந்தது, ஒதுங்க இடமில்லாமல் அவர் நான் நின்றிருந்த இடத்தில் வந்து நின்றார். அதற்குப்பின் இருவரும் பேச ஆரம்பித்தோம். அப்போது அவர், என்னைப் பற்றி எல்லா விஷயத்தையும் கேட்டு ஆச்சரியப்பட்டார்.

https://www.youtube.com/watch?v=Cz3zSnbqMsk

விஜய் சேதுபதி குறித்து சொன்னது:

பின் என்னுடைய தங்கைக்கு ஒரு ஆபரேஷன் நடந்தது. அதை தெரிந்து கொண்டு அவர் நேரில் வந்து பார்த்தார். அதற்கு பின் என்னுடைய தங்கைக்கு கல்யாணம் நடந்தது. அவருக்கு நான் பத்திரிக்கை கூட வைக்கவில்லை. அதை தெரிந்து கொண்டு திடீரென்று அவரிடம் எனக்கு போர் வந்தது. இன்று தானே உன் தங்கை கல்யாணம் என்று கேட்டுவிட்டு 20 நிமிடத்தில் கல்யாணம் நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டார். என்னுடைய அப்பா, அம்மாவிடம் என்னை பற்றி ரொம்ப பெருமையாகவும் நம்பிக்கையாகவும் பேசி இருந்தார். அதற்கு பின் அவர் சட்டு என்று மூன்று லட்ச ரூபாய் எடுத்துக் கொடுத்தார். அவர் கொடுத்த பணம் எல்லாம் போட்டு செலவு பண்ணி என் கையில் வெறும் 700 ரூபாய் தான் மீதம். அவர் அன்றைக்கு அந்த தொகை தரவில்லை என்றால் நான் கடன் வாங்கி இருப்பேன் .என்னுடைய வளர்ச்சியில் ரொம்ப அக்கறை கொண்டவர் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full