தமிழ்சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்து சென்றாலும் ஒரு சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்து விடுகின்றார்கள் அந்தவகையில் நடிகர் மனோபாலா ஒருவர். ஆரம்ப காலத்தில் பாரதிராஜாவிற்கு துணை இயக்குனராக பணியாற்றினார் நடிகர் மனோபாலா. மேலும், இவரை சிபாரிசு செய்தது வேறு யாரும் இல்லை நம் உலகநாயகன் கமலஹாசன் தான். பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1979ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றினார் நடிகர் மனோபாலா.

மேலும் இந்த படத்தில் பஞ்சாயத்து நபராக ஒரு சிறிய காட்சியில்கூட நடித்திருப்பார் மனோபாலா அதன்பின்னர் பல்வேறு படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த மனோபாலா பின்னர் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். இவர் முதன்முதலில் கார்த்தி மற்றும் சுகாசினி வைத்து ஆகாயகங்கை என்ற படத்தை இயக்கியிருந்தார். அதன் பின்னர் பல்வேறு படங்களை இயக்கினார் மணவாளா இறுதியாக ஜெயராம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான நைனா படத்தை இயக்கியிருந்தார். மேலும், சதுரங்க வேட்டை, பாம்பு சட்டை ,சதுரங்க வேட்டை 2 போன்ற பல்வேறு படங்களை தயாரித்திருக்கிறார் மனோபாலா

Advertisement

அதுமட்டுமல்லாது சன் டிவியில் ஒளிபரப்பான புன்னகை பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 7 7 போன்ற சின்னத்திரை தொடர்களையும் மனோபாலா இயக்கியிருக்கிறார் இதுவரை 14 திரைப்படங்களை இயக்கிய மனோபாலா 19 சின்னத்திரை தொடர்களை இயக்கியுள்ளார். மேலும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். மனோபாலா என்று சொன்னவுடன் நம் நினைவிற்கு முதலில் வருவது இவரது ஒல்லியான உடல் அமைப்பு தான்.

Advertisement

சொல்லப்போனால் இவரது ஒல்லியான உடல் அமைப்பு இவரது நகைச்சுவை வேடத்திற்கு மிகவும் ஏதுவாக பொருந்தியது. இந்தநிலையில் மனோபாலா கையில் பிடித்தபடி வெறித்தனமாக உடற்பயிற்சி செய்வது போல போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்தப் புகைப்படங்களை நடிகர் மனோபாலா அதே தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Advertisement
Advertisement