பாக்க தான் வில்லன், ஆனா குழந்தை மனசுங்க இவருக்கு - வயநாடு சம்பவம் குறித்து கண் கலங்கிய மன்சூர் அலிகான்
வயநாடு சம்பவம் தொடர்பாக மனவேதனையில் கண்கலங்கி நடிகர் மன்சூர் அலிகான் பதிவிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாக வயநாடு நிலச்சரிவு சம்பவம் குறித்த செய்தி தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே புரட்டி போட்டு இருக்கிறது. இது தொடர்பாக அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், சாதாரண மக்கள் என பலருமே தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.
https://www.youtube.com/shorts/6YMQN7n9TZU
இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் கண்ணீர் மல்க பேசி வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர், வயநாடு சம்பவம் ஜாதி, மதம் இனம், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், சீக்கியன், பவுத்தன், கீழ் ஜாதி, மேல் ஜாதி, உயர்ந்தவன், தாழ்ந்தவன், சினிமா, அரசியல், ஆட்சியாளர்கள், அடிவருடிகள், சந்தர்ப்பவாதிகள், கல்யாணங்கள், பந்தா, பகட்டு தனம் என எதுவுமே இல்லை. இயற்கை இயற்கையே யாவும், இயற்கையே யாவும்.
மன்சூர் அலிகான் வீடியோ:
குடும்பம் குடும்பமாக மண்ணோடு மண்ணாக புதைந்து, அவல நிலையில் வயநாடு மாறி இருக்கிறது. இன்னொரு பக்கம் ராக்கெட், ஏவுகளை குண்டுகள் வீசி கட்டடங்கள், நகரங்கள், ஊர்களை அழித்து ஒழித்து நாசமாக்கும் மனித பிண்டங்கள் ஆட்சியாளர்கள். மனிதம் மனிதம் கேள்விக்குறியில் இருக்கிறது. இயற்கையே யாவும். உயிரிழந்த வயநாடு மாமனிதர்களுக்கு என் நெஞ்சார்ந்த நெஞ்சார்ந்த ஆழ்ந்த இரங்கல்கள் என்று கதறி அழுது இருக்கிறார்.
வயநாடு நிலச்சரிவு:
கேரளாவின் வயநாடு மாவட்டம் தொடர் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களில் பேரழிவு தரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 334க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளார்கள். இன்னும் இந்த இயற்கை பேரழிவால் உயிர் இழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு இதுவரை 200க்கும் மேற்ப்பட்டோர் என்ன ஆனார்கள்? என்று தெரியவில்லை. யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இயற்கை பேரழிவு இந்த முறை ஏற்பட்டிருக்கிறது.
பேரிடர் உதவிகள்:
இந்த பேரழிவு வயநாடு நிலச்சரிவு சம்பவம் மொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. NDRF, ராணுவம், உள்ளூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இரவு பகல் பாராமல் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நான்கு நாட்களாக அவர்கள் நிலச்சரிவில் சிக்கிய மக்களை காப்பாற்றுவதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி, கேரள முதலமைச்சர் ஆகியோர் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். அதோடு மக்களை மீட்கும் பணியில் மத்திய அரசு அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்கள்.
பிரபலங்கள் உதவி:
பிரதமர் மோடி அவர்கள் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தருவதாகவும் அறிவித்திருக்கிறார். தமிழக அரசு சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியிருக்கிறார். நடிகர் விக்ரம் அவர்கள் 20 லட்சம் ரூபாய், சூர்யா-ஜோதிகா குடும்பம் 50 லட்சம், ராஷ்மிகா அவர்கள் 10 லட்சம், நயன்தாரா 20 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியிருக்கிறார்கள்.