குடிக்கறதுக்கு முன்னாடியே பின்னாடியோ இத மட்டும் சாப்ட்றாதீங்க, செத்துருவீங்க - குடிகாரர்களுக்கு மன்சூர் அலிகான் டிப்ஸ்.

By Rajkumar · 4/9/2023

மது பிரியர்களுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அளித்து இருக்கும் டிப்ஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.

பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிட்டு படுதோல்வி மன்சூர் அனைவருக்கும் தெரிந்ததே. பின் இவர் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இயக்குனர் ஆனந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் மன்சூர் அலிகான் நடித்து இருந்தார்.

தற்போது மன்சூர் அலிகான் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கிக். இந்த படத்தில் கதாநாயகன் சந்தானம் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கிருக்கிறார். இந்த படத்தில் டான்யா, கோவை சரளா, செந்தில், தம்பி ராமையா, பிரம்மாண்டம், வையாபுரி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை நவீன் ராஜ் தயாரித்திருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=UhtN1Bl5TDo

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கல்யாண விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் தளபதி விஜய்யை வைத்து இயக்கும் “லியோ” என்ற படத்தில் மன்சூர் அலிகான் நடிக்கிறார். இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து மன்சூர் அலிகான் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வந்தாலும் அடிக்கடி இவருடைய பேட்டி வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் மன்சூர் அலிகான் பிரபல youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர் மது பிரியர்களுக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார். அதாவது, வெண்டைக்காய் நல்லா சாப்பிடுங்கள். ஆனால், தண்ணீர் சாப்பிடும் நபர்கள் உடனே வெண்டைக்காய் சாப்பிட வேண்டாம்.

அதேபோல அகத்திக்கீரை ரொம்ப சக்தி வாய்ந்த ஒன்று. குடிக்கும் முன்பும் சரி, சாப்பிட்ட பிறகும் அகத்திக்கீரை உண்ண வேண்டாம். மீறி சாப்பிட்டால் உடனே அவர்கள் இறந்து விடுவார்கள். வெண்டைக்காய் சாப்பிட்டு குடித்துவிட்டு இரவு தூங்கினால் தலையில் எல்லா இடங்களிலும் வலி பரவும் என்று கூறி இருக்கிறார். இப்படி மன்சூர் அலிகான் அளித்த பேட்டி மது பிரியர்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டிங் ஆகிவிடுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full