மணமேடைக்கு Dress இல்லாம வருவீர்களா - திருமணத்தில் டான்ஸ் ஆடும் மணப்பெண்கள் குறித்து பரியேறும் பெருமாள் பட நடிகரின் பேச்சால் சர்ச்சை.

By Rajkumar · 10/4/2022

திருமணத்தில் நடனமாடும் மணப்பெண்கள் குறித்து பரியேறும் பெருமாள் பட நடிகரின் பேச்சால் சர்ச்சை கிளம்பி இருக்கிறது. நடிகர் மாரிமுத்து ஆரம்ப காலத்தில் இணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். மேலும், இவர் கண்ணும் கண்ணும், புலி வால் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். அதே போல உதயா, கடைக்குட்டி சிங்கம், யுத்தம் செய், சண்டக்கோழி, பரியேறும் பெருமாள் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிகர் மாரிமுத்து அஜித் நடித்த ஆசை படத்தில் இணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

https://twitter.com/chettyrajubhai/status/1508795878206689286

தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர் நீச்சல்' தொடரில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இந்த சீரியலின் எபிசோட் ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. இந்த தொடரில் கடந்த வாரம் புகைப்படக்கலைஞர் ஒருவரை மற்றொரு நபர் ஒருமையில் திட்டும் வகையில் புகைப்பட தொழிலை கொச்சைப்படுத்துவது போன்ற காட்சி ஒளிபரப்பாகி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

சர்ச்சையை கிளப்பிய சீரியல் காட்சி :

இதையடுத்து தமிழ்நாடு போட்டோ மற்றும் வீடியோ கிராபர் சங்கம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தார்கள். மேலும், இயக்குனர் திருச்செல்வம் மற்றும் நடிகர் மாரிமுத்து ஆகிய இருவரும் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இது குறித்து இயக்குனர் திருச்செல்வத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் எந்த ஒரு பதிலும் விளக்கமும் கொடுக்கவில்லை என்று புகைப்பட கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

https://twitter.com/nv_vignesh/status/1512653155674120196

திருமணத்தில் நடனமாடும் பெண்கள் குறித்து மாரிமுத்து :

அதுமட்டுமில்லாமல் திருச்செல்வம் மன்னிப்பு கேட்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இந்த தகவல் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் மாரிமுத்துவிடம், திருமணத்தில் நடனமாடும் மணப்பெண்கள் குறித்து கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு பதில் அளித்த அவர் : -

https://twitter.com/ShriTwitz/status/1512331440511348738

ஒரு பொண்ணு இப்படி தான் இருக்கனும் :

கல்யாணத்துல யார் வேண்டுமானாலும் டான்ஸ் ஆடலாம் ஆனால் மணமகள் ஆடக்கூடாது அப்படி ஆடினால் அவள் மன பெண்ணாகவே இருக்க மாட்டாள்.அப்புறம் ஏன் டிரஸ் போட்டு வர வேண்டும் டிரஸ் இல்லாமல் வந்து மணவறையில் உட்கார வைக்கலாமே அது நல்லா இருக்குமா ? ஒரு ஆண் நடந்து போனால் அவன் பின்னால் நடந்து போனால் தான் பெண்ணிற்கு அழகு. அவன் நிழலில் தான் அவள் இருக்க வேண்டும்.

https://twitter.com/raidenhourly/status/1512747847380205573

மாரிமுத்து பேச்சுக்கு குவியும் கண்டனங்கள் :

தாலி கட்டும் போது தலை குனிந்து வந்து தான் வாங்க வேண்டும். அப்புறம் ஏன்தாலி கடிக்கிறீங்க. தூக்கி போடா வேண்டியது தானே ? என்று பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில் இவரது பேச்சுக்கு பெரும் கண்டனங்களும் குவிந்து வருகிறது. நடிகர் மாரிமுத்து அஜித் நடித்த ஆசை படத்தில் இணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் பலர் விமர்சித்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full