நான் லக்ஷ்மியை விட்டு பிரிய இது தான் காரணம் - உண்மையை உடைத்த நடிகர் மோகன் ஷர்மா, என்ன தெரியுமா?

By subhashini · 29/4/2025

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் லட்சுமி. இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார். லட்சுமியின் தந்தை-தாய் இருவருமே சினிமா துறையில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் மல்லியம் ராஜகோபாலால் தான் லட்சுமி தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டார். முதலில் நடிகை லட்சுமி நடித்த படம் ஜீவனாம்சம். இந்த படம் 1968ஆம் ஆண்டு வெளிவந்தது.

அதன் பின் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். 70 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை இவர் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். மேலும், தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் நடித்திருக்கிறார். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு உட்பட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.

லட்சுமி:

இதற்கிடையில் நடிகை லட்சுமி அவர்கள் தன்னுடைய 17 வயதிலேயே பெற்றோர் முடிவு செய்த பாஸ்கர் என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு பிறந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா. பின் இவர் பாஸ்கர் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தன்னுடைய மகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். அதற்குப்பின் இவர் பிரபல நடிகர் மோகன் சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணமும் விவாகரத்தில் தான் முடிந்தது.

மோகன் சர்மா பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் நடிகை லட்சுமி உடனான பிரிவு குறித்து நடிகர் மோகன் சர்மா பேட்டியில், நான் என்னுடைய தொழிலில் சரியாகத்தான் இருந்தேன். பல நடிகைகள் என் மீது ஆசைப்பட்டார்கள். என்னிடமும் விருப்பத்தை சொன்னார்கள். இருந்தாலும் எனக்கு யாரையும் பிடிக்கவில்லை. அதோடு நான் யாருக்கும் நம்பிக்கை கொடுத்து ஏமாற்றவில்லை. இருந்தாலும் என் மனதிற்குள் யாரையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் நான் லட்சுமியை கல்யாணம் செய்ய முடிவு எடுத்தேன். அதை நான் வீட்டில் சொன்னவுடன் ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று மனம் உடைந்து விட்டார்கள்.

https://www.youtube.com/watch?v=fKWsNGRMxes

திருமணம் பற்றி சொன்னது:

இதனால் என்னுடைய அம்மாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்தது. இருந்தாலும் எல்லாத்தையும் கடந்து நான் லட்சுமியை திருமணம் செய்து கொண்டேன். லட்சுமி உடன் நான் 10 வருடம் தான் வாழ்ந்தேன். ஒரு கட்டத்தில் லட்சுமி அவளுக்கான விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதற்கு பிறகு தான் எங்களுடைய உறவில் விரிசல் பெற ஆரம்பித்தது. நாங்கள் இருந்த வீட்டில்தான் லட்சுமியின் முன்னாள்கணவருக்கு பிறந்த ஐஸ்வர்யாவும், அவருடைய அம்மாவும் இருந்தார்கள். அதையெல்லாம் என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. அது எங்களுடைய இருவரின் வாழ்க்கையையும் பாதித்தது. உண்மையில் அது எனக்கு பிடிக்கவும் இல்லை.

பிரிவிற்கான காரணம்:

நான் சினிமாவுக்காக அலுவலகம் ஒன்றை பக்கத்தில் எடுத்து வைத்திருந்தேன். அதனால் என்னுடைய பொருளை எல்லாம் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டேன். நான் அவருடன் பேசி அந்த பிரச்சினையை தீர்க்க கூட விரும்பவில்லை. காரணம், அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று எனக்கு எண்ணமே வரவில்லை. லட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆனது எனக்கு தெரியும் தான். இருந்தாலும் நான் அவரை கல்யாணம் செய்து கொண்டேன். ஆனால், என்னிடம் பேசும்போது லட்சுமி, முன்னாள் கணவர் உடன் விவாகரத்து ஆகி விட்டதாக சொன்னார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய அம்மா தான் தன் மகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார் என்றெல்லாம் சொன்னார். அதன் பின்னர்தான் நான் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டேன் என்று கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full