சம்பளமே இல்லாமல் குதிரை, ஆடுகளை கவனித்து கொள்ளும் மோகன்லாலின் மகன் - முழு விவரம் இதோ
சம்பளம் வாங்காமல் நடிகர் மோகன் லாலின் மகன் வேலை செய்து வரும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் மோகன் லால். இவர் தன்னுடைய 18 வயதில் சினிமாவில் நுழைந்தார். இவர் முதன்முதலில் சினிமாவில் வில்லனாக தான் அறிமுகமானார். அதற்கு பிறகு தான் ஹீரோவாக கலக்கி கொண்டு வருகிறார்.
இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இதுவரை இவர் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் மலையாள மொழியில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் நடிகராக மட்டும் இல்லாமல் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் பரோஸ் என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
மோகன்லால் பற்றிய தகவல்:
இயக்குனராக அவதாரம் எடுத்த மோகன் லாலுக்கு நடிகர் மம்முட்டி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு மோகன்லாலின் உடைய பரோஸ் படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு 200 கோடி பட்ஜெட். அதுமட்டும் இல்லாமல் ஃபேண்டஸி பாணியில் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி இவர் சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கு மேல் பல சாதனை படைத்து வருகிறார்.
மோகன்லால் குடும்பம்:
இதற்கிடையில் கடந்த 1988 ஆம் ஆண்டு மோகன்லால் அவர்கள் சுசித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது முழுக்க முழுக்க காதல் திருமணம் தான். இவருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் இருக்கிறார்கள். இருவருமே சினிமா துறையில் தான் பணியாற்றி வருகிறார்கள். பிரணவ் மோகன் லால் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.
பிரணவ் குறித்த தகவல்:
தற்போது இவர் ஹீரோவாக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு இவர் ஒரு சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த இருதயம் என்ற படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த வருடம் இவர் வருஷங்களுக்கு வேஷம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இவர் சம்பளம் இல்லாமல் வேலை செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரணவ் செய்யும் வேலை:
அதாவது, மோகன் லாலின் மகன் பிரணவ் ஸ்பெயின் நாட்டில் வேலை செய்து வருகிறார். இதற்கு அவர் சம்பளம் கூட வாங்குவதில்லை. தங்குவதற்கு இடம் மற்றும் உணவு இருந்தாலே போதும் என்று வேலை செய்து வருகிறார். அதோடு குதிரை மற்றும் ஆடுகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பையும் பிரணவ் செய்து கொண்டிருக்கிறார். அதேபோல் நடிகர் மோகன்லாலின் மகள் உதவி இயக்குனராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.