பேண்ட், டக்கின் செய்யப்பட்ட டி-ஷர்ட், தலையில் கரு கரு முடி. இதுவரை நீங்கள் பார்த்திராத மொட்டை ராஜேந்திரனின் இளம் வயது புகைப்படம்.

By Rajkumar · 12/10/2020

தமிழ் சினிமாவில் தற்போது காமெடியியிலும்,வில்லன் வேடத்திலும் தமிழ்த்திரையுலகை கலக்கி வருபவர் ராஜேந்திரன்.எப்பொழுதுமே மொட்டை தலை, கரகரவென்ற தனித்த குரல் இதான் மொட்டை ராஜேந்திரனின் அடையாளம். ஆரம்ப காலத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்தாலும் அதைத்தொடர்ந்து வில்லன் பாத்திரத்திலும், காமெடி பாத்திரங்களிலும் தற்பொழுது குணச்சித்திரப் பாத்திரங்களிலும் அசத்தி வருகின்றார்.

மொட்டை ராஜேந்திரன் ஆரம்பத்தில் ஒரு டூப் மேனாக தான் சினிமாவில் பணியாற்றி வந்தார். இவர் சினிமாவில் தோன்றும் முன்னரே பல படங்களில் ஸ்டாண்ட் காட்சிகளுக்கு டூப் மேனாக இருந்துள்ளார். அதன் பின்னர் தான் இவர் திரைப்படத்தின் சண்டை காட்சிகளில் பைட்டராக நடிக்க துவங்கினார். இவர் டூப் மேனாக இருந்த போது கேரளாவில் ஒரு ஷூட்டிங்கிற்காக சென்றுள்ளார். ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்தபொழுது வில்லன் ஒரு கழிவு வாய்க்காலில் குதிப்பது போன்றதொரு காட்சிக்காக அப்படியே கழிவுநீரில் குதித்துவிட்டாராம்.

அதன் பின்னர் அவரது உடலிலே தோல்நோய் ஏற்பட்டு அவரது உடலிலிருந்து அத்தனை முடிகளும் கொட்டத்தொடங்கி விட்டனவாம். குரலும் மாறிவிட்டதாம். அதன் பின்னர் எவ்வளவு மருத்துவம் பார்த்தும் சரிசெய்ய முடியவில்லையாம்.கால ஓட்டத்தில் மொட்டை ராஜேந்திரன் மாறிய குரலாலும்,உருவ தோற்றத்தினாலுமே அனைவரும் ரசிக்கும் படியாக நடித்து பிரபலமாகியும் விட்டார். நான் கடவுள் படத்திற்கு பின்னர் தான் இவரை பலரும் தெரியும்.

ஆனால், அதற்கு முன்பாகவே இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதுவும் அப்போதெல்லாம் தலையில் முடியுடன் தான் இருந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவரின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், பேண்ட் அணிந்து கொண்டு டி-ஷர்ட்டை டக்கின் செய்து கொண்டு தலையில் கருமையான முடியுடன் காணப்படுகிறார் மொட்டை ராஜேந்திரன்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full