பொதுவாகவே சினிமா உலகில் வாரிசு நடிகர்கள் வருவது வழக்கமான ஒன்று தான். சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை வாரிசு நடிகர்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் எம் ஆர் சந்தானம். இவர் தமிழ் திரை உலகில் பழம்பெரும் நடிகராக இருந்தவர். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் மேடை நாடகம் முலம் தான் தன்னுடைய நடிப்பு கேரியை தொடங்கினார்.

அதற்கு பின்பு படங்களில் நடித்தும் தயாரித்தும் இருந்தார். இவர் தயாரித்த பாசமலர், அன்னை இல்லம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இவர் படங்களில் நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் போன்ற பல வேடங்களில் நடித்து இருந்தார். மேலும், இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனிடையே இவர் ராஜலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இவருக்கு ஐந்து பிள்ளைகள். அதில் சந்தான பாரதி, ஆர் எஸ் வாஜி ஆகியோர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் ஆவார்கள். தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் சந்தான பாரதி. இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் முதலில் உதவியாளராக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் படங்களை இயக்க ஆரம்பித்தார். அதிலும் இவர் கமலஹாசனை வைத்து இயக்கிய குணா படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

சந்தான பாரதி குறித்த தகவல்:

அதனை தொடர்ந்து இவர் படங்களில் வில்லன், குணச்சித்திரம் வேடங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் நடித்து வருகிறார். மேலும், இவருடைய சகோதரர் ஆர் எஸ் சிவாஜி. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர் ஆர் எஸ் சிவாஜி. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இணை இயக்குனர், ஒலி வடிவமைப்பாளர், லைன் ப்ரொடியூசர் இயக்குனர், பன்முகங்களைக் கொண்டவர்.

Advertisement

ஆர்.எஸ்.சிவாஜி குறித்த தகவல்:

இவர் அதிகம் தமிழ் மொழி படங்களில் தான் நடித்திருக்கிறார். குறிப்பாக, கமலஹாசன் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சம்பந்தப்பட்ட படங்களில் இவர் அதிகம் நடித்திருக்கிறார். இவர் அதிகம் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு இவர் சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்திருந்த கார்க்கி படத்திலும் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் சின்னத்திரை தொலைக்காட்சிகளிலும் நடித்திருக்கிறார். இவர் கடைசியாக இவர் நடித்திருந்த படம் லக்கி மேன். பின் கடந்த ஆண்டு இவர் திடீரென்று உடல்நல குறைவு காரணமாக காலமானார்.

Advertisement
Advertisement