விஜய்யின் 'ஜனநாயகன்' பட வாய்ப்பை மறுத்தேனா? நடிகர் முனீஷ்காந்த் சொன்ன பளீச் பதில்

By subhashini · 26/11/2025

விஜய் பட வாய்ப்பு மறுத்த காரணம் பற்றி நடிகர் முனீஸ்காந்த் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் முனீஸ்காந்த். ஆரம்பத்தில் இவர் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின் இவர் கலைஞர் டிவியில் நடந்த நாளைய இயக்குனர் என்ற குறும்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தது.

இப்படி தொடர்ந்து சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சூது கவ்வும், பீட்சா, ஈஸ்வரன், பேச்சுலர் போன்ற படங்களின் மூலம் கவனிக்கப்பட்டார். தற்போது இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். சமீபத்தில் சுந்தர்.சி இயக்கி நடிப்பில் வெளியாகியிருந்த கேங்கர்ஸ் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் முனீஷ்காந்த் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் படம் பெற்று தந்திருந்தது.

முனீஸ்காந்த் பேட்டி:

இதை தொடர்ந்தும் இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது முனீஸ்காந்த் நடித்த படம் மிடில் கிளாஸ். இந்த படத்தில் விஜயலட்சுமி, குரேஷி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை கிஷோர் இயக்கி நடித்திருக்கிறார்கள். கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதற்கிடையில் அளித்த பேட்டியில் முனீஸ்காந்த், ஜனநாயகன் படம் தொடர்பாக கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Thanthi TV (@thanthitv)

விஜய் பட வாய்ப்பை மறுக்க காரணம்:

அதில் அவர், விஜய் சாரோட ஜனநாயகன் படத்தில் நடிக்க நிறைய முயற்சி செய்தேன். அந்த இயக்குனரை நேரில் பார்த்து வாய்ப்பு கொடுங்கள் என்றெல்லாம் கேட்டேன். ஏன்னா, விஜய் சாரோட கடைசி படம். கூட்டத்தில் நிற்பது மாதிரியான ஒரு காட்சி கிடைத்தால் கூட போதும் என்றெல்லாம் கேட்டேன். அவருமே சரி என்று எனக்கு ஒரு கதாபாத்திரமும் ஏற்பாடு செய்து தந்தார். ஆனால், அந்த சமயத்தில் நான் வேறு ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதால் ஜனநாயகன் படத்தில் நடிக்க முடியாமல் போனது. ரொம்பவே மிஸ் செய்து விட்டேன். இப்ப நினைத்தாலும் எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

ஜனநாயகன் படம்:

தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்குகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், மமிதா, கௌதமேனன், பிரியாமணி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.பிரபலமான தயாரிப்பு நிறுவனம் KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full