என் மனைவியை காப்பாத்துங்க விஜய் சார் - கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட நடிகர் முத்துக்காளை
தமிழ் சினிமாவில் வைகைப்புயல் வடிவேலுவுடன் சேர்ந்து படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் முத்துக்காளை. இவர் 'என் புருஷன் குழந்தை மாதிரி’ என்ற படத்தில் ‘செத்து செத்து விளையாடுவோமா என்ற டயலாக் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமடைந்தார். அதன் பின் இவர் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்து இருக்கிறார். பின் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து விலகி விட்டார். அதோடு முத்துக்காளை பட்டப்படிப்புகளை முடித்து பலருக்கும் முன்னுதாரணமாக வருகிறார்.
ஏற்கெனவே இவர் இரண்டு பட்டப்படிப்புகளை முடித்திருந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு பி.லிட்,. பட்டம் பெற்றிருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, முத்துக்காளை மனைவி மாலதிக்கு தலையில் ரத்த கசிவு ஏற்பட்டு சில வாரங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின் மாலதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருந்தாலும் நோய் தொற்று காரணமாக 17 நாட்களாக மூச்சு விட முடியாமல் ரொம்பவே சிரமப்பட்டு இருந்திருக்கிறார் மாலதி.
முத்துக்காளை நிலை:
அதற்குப்பின் தன்னுடைய மனைவிக்கு மேல் சிகிச்சை அளிக்க உதவி கூறி முத்துக்காளை தமிழக முதல்வர் விஜய் இடம் வேண்டுகோள் வைத்து இருக்கிறார். அதில் அவர், என்னுடைய மனைவி மாலதிக்கு தலையில் ஏற்பட்ட ரத்த காயத்திற்காக சென்னை மருத்துவமனையில் சேர்த்து இருந்தேன். ஆபரேஷன் முடிந்து 17 நாட்கள் ஆகிவிட்டது. இருந்தாலும் மூளையில் ஏற்பட்ட ரத்த காயங்கள் சரியானாலும் கூட நுரையீரல் தொற்று காரணமாக என்னுடைய மனைவி மூச்சு விட ரொம்பவே சிரமப்பட்டு வருகிறார்.
https://www.youtube.com/watch?v=wtvvVak7IBU
முத்துக்காளை வீடியோ:
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சார் அவர்கள் என்னுடைய மனைவியின் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்து என் மனைவியின் உயிரை காப்பாற்ற வேண்டுகிறேன். கிட்டத்தட்ட 17 நாட்களாக தனி மனிதராக மருத்துவமனையில் நின்று போராடிக் கொண்டிருக்கிறேன். தமிழக முதல்வர் எனக்கு உதவி செய்தால் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன் என்று எமோஷனலாக பேசி இருக்கிறார். இதை அடுத்து தமிழக முதல்வர் முத்துக்காளையின் கோரிக்கையை ஏற்றார்.
முதல்வர் விஜய் செய்தது:
உடனடியாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு தொலைபேசியில் முத்துகாளை இடம் பேச சொல்லி மருத்துவ உதவிக்கான சிகிச்சையை செய்ய சொல்லி இருக்கிறார் முதல்வர் விஜய். அதற்குப்பின் மருத்துவமனைக்கு நேரடியாக சென்ற அமைச்சர் ராஜ் மோகன் முத்துகாளை இடம் அவருடைய மனைவியின் நலத்தை விசாரித்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டிருக்கிறார். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் முதல்வர் விஜயின் செயலை பாராட்டி வருகிறார்கள்.