நாக சைதன்யா-சோபிதா திருமணம் குறித்த அப்டேட் , எச்சரிக்கும் ரசிகர்கள் - மீண்டும் மீண்டும் அதே பிளானா?

By subhashini · 23/8/2024

நாக சைதன்யாவின் திருமண தேதி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் நாக சைதன்யா-சோபிதா நிச்சயதார்த்தம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார். இதனிடையே நாக சைதன்யா- சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா- நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 இருவரும் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரம் தெரியவில்லை.

நாக சைதன்யா- சோபிதா துலிபாலா காதல்:

இவர்களின் விவாகரத்துக்கு பிறகு நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் பரவி இருந்தது. மேலும், இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. ஆனால், இது குறித்து இவர்கள் இருவரும் எந்த இது விளக்கமோ கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் தான் நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம் நாக சைதன்யாவின் வீட்டில் நடந்தது.

நாக சைதன்யா- சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம்:

அதோடு இந்த நாள் தான் நாகச் சைதன்யா மற்றும் சமந்தா தங்களது காதலை தெரிவித்துக் கொண்ட நாளாம். அதற்காக, இதே நாளில் சோபித்தாவுடன நிச்சயதார்த்தம் நடக்க வேண்டும் என்று நாக சைதன்யா விரும்பி இருந்தாக சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி இருந்தது. பின் சோசியல் மீடியா முழுவதும் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் வைரலாகி இருந்தது. கூடிய விரைவிலேயே இவர்களின் திருமண தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

நாக சைதன்யா திருமண தேதி:

இந்நிலையில் நடிகர் நாக சைதன்யாவின் திருமண தேதி குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, வருகிற 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடிகர் நாக சைதன்யா- சோபிதா திருமணம் நடக்க கூறப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு இறுதியிலும் திருமணம் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திருமண தேதி குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. மேலும், திருமணத்திற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் டெஸ்டினேஷன் வெட்டி நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ரசிகர்கள் கமெண்ட்:

தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் அறிவுரை கூறி வருகிறார்கள். ஏற்கனவே சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் கோவாவில் தான் டெஸ்டினேஷன் வெட்டிங் நடந்தது. ஆனால், திருமணமான 4 ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். தற்போது மீண்டும் டெஸ்டினேஷன் வெட்டிகை நாகசைதன்யா தேர்வு செய்திருப்பது சரி கிடையாது. இது அவருடைய வாழ்க்கைக்கு பெரிய ஆபத்தாக முடியும். அதனால் டெஸ்டினேஷன் திருமணம் வேண்டாம். ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றெல்லாம் கமெண்ட் போட்டிருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full