நாக சைதன்யா-சோபிதா ஜோடிக்கு குழந்தை பிறக்க போகிறதா? வெளியான உண்மை - அதிருப்தியில் ரசிகர்கள்

By subhashini · 7/5/2025

நாக சைதன்யாவின் மனைவி சோபிதா கர்ப்பமாக இருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நாக சைதன்யா நடிப்பில் வெளிவந்த படம் தண்டேல்.

இந்த படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்திருந்தார். ஏற்கனவே நாக சைதன்யா- சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து தண்டேல் படத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த படம் தமிழ், தெலுங்கில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி வெளியாகி இருந்தது. நிஜ வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது.

நாக சைதன்யா குறித்த தகவல்:

இதை அடுத்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடியாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

நாக சைதன்யா- சோபிதா திருமணம்:

இவர்களின் விவாகரத்திற்கு பிறகு நாக சைதன்யா அவர்கள் நடிகை சோபிதாவை காதலித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்களின் நிச்சயதார்த்தம் எளிமையாக நாக சைதன்யாவின் வீட்டில் நடந்தது. ஆனால், சமந்தா ரசிகர்கள் சைதன்யாவை கடுமையாக விமர்சித்து இருந்தார்கள். அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாகர்ஜுனா குடும்பத்துக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நாக சைதன்யா- சோபிதா திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

சோபிதா கர்ப்பம்:

திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் நாக சைதன்யா- சோபிதா தம்பதி குழந்தையை எதிர்பார்த்து இருக்கும் தகவல் தான் தற்போது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கு காரணம், மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகை சோபிதா அவர்கள் தன்னுடைய வயிறு தெரியாதவாறு புடவையை மூடி அணிந்து இருந்தார். அதோடு அவர் வயிறு கொஞ்சம் பெரிதாக தெரிந்தது.

சர்ச்சைகளுக்கு விளக்கம்:

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் சோபிதா தளர்வான ஆடைகளை தான் அணிந்து வருகிறார். இதனால் தான் இவர் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக நாக சைதன்யா குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள், சோபிதா கர்ப்பம் இல்லை என்று மறுத்து இருக்கிறார்கள். சோபிதா ஆன்டி பிட் உடை அணிந்திருந்தார். அதில் வயிற்றுப் பகுதி பெரிதாக தெரிந்தது. அவர் கர்ப்பமாக இருப்பது போல தெரிந்தது என்று கூறி இருக்கிறார்கள். ஆனால், இது தொடர்பாக நாக சைதன்யா-சோபிதா தரப்பில் எதுவும் சொல்லவில்லை. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full