நாங்க ரெண்டும் பேரும் ஒரே ஊர் இல்லை, ஆனால் - மனைவி சோபிதா பற்றி நாக சைதன்யா சொன்ன விஷயம்

By subhashini · 31/1/2025

தன்னுடைய மனைவி சோபிதா பற்றி நாக சைதன்யா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதற்கிடையில் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடியாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர்களின் விவாகரத்திற்கு பிறகு நாக சைதன்யா அவர்கள் சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்களின் நிச்சயதார்த்தம் எளிமையாக நாக சைதன்யாவின் வீட்டில் நடந்தது.

நாக சைதன்யா- சோபிதா திருமணம்:

அதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 4ம் தேதி நாகர்ஜுனா குடும்பத்துக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் உள்ள நாகர்ஜுனா ஸ்டுடியோவில் நாக சைதன்யா- சோபிதா திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நாக சைதன்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தண்டேல்.

தண்டேல் படம்:

இந்த படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். ஏற்கனவே நாக சைதன்யா- சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான லவ் ஸ்டோரி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து தண்டேல் படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சந்தூ மொண்டேடி இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கில் இரு மொழிகளில் பிப்ரவரி 27ஆம் தேதி வெளியாகயிருக்கிறது.

நாக சைதன்யா பேட்டி:

இந்த படம் நிஜ வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தான் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனிற்காக அளித்த பேட்டியில் திருமண வாழ்க்கை பற்றிய கேள்விக்கு நாக சைதன்யா, என் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கிறது. நான் அதை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். திருமணம் ஆகி இரண்டு மாதம் தான் ஆனது. நாங்கள் இருவரும் வேலையில் பிஸியாக ஆர்வம் காட்டி இருக்கிறோம். இருந்தாலுமே எங்களின் வேலை குடும்ப வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை.

திருமண வாழ்க்கை பற்றி சொன்னது:

நாங்கள் இருவரும் சேர்ந்து இருப்பதற்கு இந்த குணமும் ஒன்று என்று நான் நினைக்கிறேன். அதேபோல் நாங்கள் ரெண்டு பேருமே ஆந்திராவை சேர்ந்தவர்கள். அவள் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர். நான் விசாகப்பட்டினத்தை நேசிக்கிறேன். நாங்கள் ஒரே நகரங்களை சேர்ந்தவர்கள் இல்லை என்றாலும் எங்கள் வேர்கள் ஓத்தவை. கலாச்சார ரீதியாக எங்களிடம் நிறைய ஒற்றுமை இருக்கிறது. சினிமா மீதான காதல், இந்த கலை வடிவத்தின் மீதான காதல் எல்லாம் எங்களை இணைக்கிறது. நாங்கள் இருவரும் வாழ்க்கையை பற்றி ரொம்ப ஆர்வமாக உரையாடுகிறோம். அதை பயணிப்பதையும் நாங்கள் விரும்புகிறோம் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full