நாகர்ஜுனாவின் முதல் மனைவி யார் தெரியுமா? இவங்க விவாகரத்துக்கு காரணம் இது தான்
நாகர்ஜுனாவின் முதல் மனைவி குறித்து பலரும் அறிந்திராத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் நாகர்ஜுனா ஒருவர். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார்.
இருந்தாலும், இவர் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தற்போது இவர் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹீரோவாக தனுஷும், கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கிறார்கள். மேலும், இவர் தன்னுடைய நடிப்பின் மூலம் இந்திய சினிமா அளவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்திருக்கிறார். இதுவரை இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
நாகார்ஜுனா குறித்த தகவல்:
தன்னுடைய நடிப்பிற்காக இவர் பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார். தற்போதும் இவர் படங்களில் ஹீரோவாக கலக்கிக் கொண்டு தான் வருகிறார். இந்த நிலையில் நடிகர் நாகார்ஜுனாவின் முதல் மனைவி குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் நாகார்ஜுனாவுக்கு இரண்டு மனைவிகள். இவருடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து தான் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
நாகார்ஜுனா முதல் மனைவி:
பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷின் சகோதரி லட்சுமியை தான் 1984 ஆம் ஆண்டு நாகார்ஜுனா திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு பிறந்தவர் தான் நாக சைதன்யா. இந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. நாகார்ஜுனாவின் தந்தை நாகேஸ்வர ராவும், லட்சுமியின் ராமாநாயு டகுபதியும் நல்ல குடும்ப நண்பர்கள். அதனால் தான் தங்களுடைய பிள்ளைகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் நாகர்ஜுனா சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகார்ஜுனா இரண்டாம் மனைவி:
பின் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் 1990 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். லட்சுமியை விவாகரத்து செய்த பிறகு நடிகர் நாகார்ஜுனா அவர்கள் பிரபல நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நாகர்ஜுனா தான் அமலா விடும் முதலில் பிரபோஸ் செய்திருந்தார். அதற்குப் பின் 1992-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு பிறந்த மகன் தான் அகில்.
நாகார்ஜுனா குடும்பம்:
அதோடு லட்சுமி, நாகார்ஜுனாவை பிரிந்த பிறகு எந்த பேச்சுவார்த்தையுமே இல்லை. ஆனால், நாக சைத்தன்யா தன்னுடைய தந்தை மற்றும் அமலா, அகில் ஆகியோருடன் ஒன்றாக இருக்கிறார். நாகர்ஜுனாவை பிரிந்த பிறகு லக்ஷ்மி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதலில் தன்னுடைய இரண்டாவது கணவருடன் சென்னையில் இருந்தார். அதற்கு பின் ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார்