'என் குழந்தை பருவத்தை மீட்டெடுத்தது' - மெய்யழகன் படம் குறித்து நெகிழ்ச்சியில் நடிகர் நாகர்ஜூனா சொன்னது
மெய்யழகன் படம் குறித்து நடிகர் நாகர்ஜூனா போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்திக். இவரது நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது. ஆனால், கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான ‘ஜப்பான்’ திரைப்படம் படும் தோல்வி அடைந்தது. இதை அடுத்து
தற்போது, கார்த்தி நடிப்பில் இயக்குனர் பிரேம்குமாரின் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் ‘மெய்யழகன்’.
பிரேம்குமார் விஜய் சேதுபதி- திரிஷா நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ’96’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது இவர் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மெய்யழகன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.
மெய்யழகன் படம் :
சில தினங்களுக்கு முன் தான் மெய்யழகன் படம் வெளியாகி இருந்தது. உறவுகளின் எமோஷனை சொல்லும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலருமே பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், இந்த படத்தை தெலுங்கில் சத்யம் சுந்தரம் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் மெய்யழகன் படத்தை பார்த்து பாராட்டி நடிகர் நாகர்ஜுனா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.
Dear brother Karthi, I saw your film #SatyamSundaram last night!! You and Arvind ji were just too too good… I had a smile throughout watching you and went to sleep with the same smile… Brought back so many childhood memories… and also memories of our film #oopiri .
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) September 30, 2024
I’m so…
நடிகர் நாகர்ஜுனா பதிவு :
அதில் அவர், என்னுடைய அன்பு சகோதரர் கார்த்தி நடித்த மெய்யழகன் படத்தை பார்த்தேன். ஆரம்பம் முதல் இறுதி வரை என் முகத்தில் ஒரு சின்ன புன்னகை தவழ்ந்து கொண்டே இருந்தது. அந்த மகிழ்ச்சியான உணர்வுடன் தான் நான் தூங்கவும் போனேன். இந்த படம் என்னுடைய குழந்தை பருவத்தின் இனிய நினைவுகளை மீட்டெடுத்தது. நாங்கள் இருவரும் இணைந்து நடித்த தோழா திரைப்படத்தின் அனுபவங்களையும் நினைவுபடுத்தி இருந்தது என்று நெகிழ்ச்சியில் பதிவிட்டு இருக்கிறார்.
படத்தின் கதை:
படத்தில் நடிகர் அரவிந்த்சாமி சொத்து பிரச்சனையின் காரணமாக உறவினர்களுடன் சண்டை போட்டு தன்னுடைய சின்ன வயதிலேயே, தான் உயிருக்கு உயிராக நேசித்த வீட்டையுமே காலி செய்து தன் குடும்பத்துடன் சென்னைக்கு சென்று விடுகிறார். பின் தங்கையுடைய திருமணத்திற்காக 22 வருடங்கள் கழித்து தன்னுடைய சொந்த ஊருக்கு வர வேண்டிய கட்டாயம் வருகிறது. அப்போது தான் கார்த்திக் உடைய என்ட்ரி ஆரம்பிக்கிறது. ‘அத்தான் அத்தான்’ என்று அரவிந்த் சுவாமியை சுற்றி கொண்டு கார்த்தி இருக்கிறார்.
படம் குறித்த தகவல்:
அவரின் பெயரை தவிர வேற ஒன்றும் அரவிந்தசாமிக்கு தெரியவில்லை. இருந்தாலும் கார்த்தி கஷ்டப்படக்கூடாது என்பதற்காக தெரிந்தது போல காட்டிக் கொள்கிறார் அரவிந்த்சாமி. பின் கார்த்தியால் சென்னைக்கு போகும் பஸ்ஸை அரவிந்த்சாமி தவறவிடுகிறார். அதற்குப்பின் அவருடனே அரவிந்த்சாமி தங்கியும் விடுகிறார். ஒரு நாள் இரவு முழுவதும் கார்த்திக்குடன் குடித்துவிட்டு, அரட்டை அடித்து கொண்டு அரவிந்த்சாமி தன்னுடைய பழைய விஷயங்களை எல்லாம் பகிர்ந்து கொள்கிறார். கடைசியில் கார்த்தி யார் என்று அரவிந்த்சாமி தெரிந்து கொண்டாரா? கார்த்திக்கும் அரவிந்த்சாமிக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதி கதை.