தாத்தாவின் இடத்தை பிடிப்பாரா? மீண்டும் சினிமாவில் களமிறங்கிய பழம்பெரும் நடிகர் நாகேஷ் பேரன்
நடிகர் நாகேஷின் பேரன் நடித்து இருக்கும் படம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ். இவருடைய நடிப்பு மூலம் தான் சினிமாவில் படங்களில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. காலம் கடந்தாலும் நாகேஷின் நகைச்சுவையும், ஞாபகங்களும் என்றும் மக்கள் மனதை விட்டு நீங்காது. பல போராட்டத்திற்கு பிறகு தான் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும், இவர் எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன், ஜெமினி கணேசன் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருந்தார். இவர் கடைசியாக கமலஹாசன் நடிப்பில் வெளியாகியிருந்த 'தசாவதாரம்' படத்தில் தான் நடித்திருந்தார். இவருடைய மகன் ஆனந்த் பாபு. இவரும் பிரபலமான நடிகர் தான். 90ஸ் காலகட்டத்தில் இவர் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருந்தார். பின் இடையில் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாததால் சில காலம் என்ன ஆனார்? என்று தெரியவில்லை.
நாகேஷ் குறித்த தகவல்:
அதற்கு பிறகு இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு என்ற தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும், ஆனந்த் பாபுவின் மகன் தான் பிஜேஷ் நாகேஷ். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு சந்தானத்தின் நடிப்பில் 'சர்வர் சுந்தரம்' என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் பல வருடங்கள் கடந்தும் வெளியாகாமல் இருக்கிறது. இதை அடுத்து இவர் பிரபுதேவாவின் நடிப்பில் வெளிவந்த 'பொன்மாணிக்கவேல்' என்ற படத்தில் நடித்தார்.
நாகேஷ் பேரன்:
இது தவிர இன்னும் சில படங்களில் இவர் நடித்திருக்கிறார். தற்போது நாகேஷ் பேரன் பிஜேஸ் நாகேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'வானரன்'. இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் பிஜேஷ் நாகேஷ் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஸ்ரீராம் பத்மநாபன் இயக்கி இருக்கிறார். ஆரஞ்சு பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. மேலும், இந்த படத்தினுடைய பாடல் உரிமைகளை லட்சுமி மூவர் மேக்கர்ஸின் எம்.எல்.எம் எனும் ஆடியோ நிறுவனம் பெற்றிருக்கிறது.
நாகேஷ் பேரன் நடிக்கும் படம்:
இந்த படம் பகல் வேஷம் கலை சார்ந்த ஒரு மனிதனுடைய வாழ்க்கையை பற்றி சொல்லும் கதை. இந்த படத்தில் பிஜேஸ் நாகேஷ், அக்ஷயா, பேபி வர்ஷா, லொள்ளு சபா ஜீவா, தீபா சங்கர், நாஞ்சில் விஜயன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஷாஜகான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது.